24 special

தேர்தல் முடிந்த கையோடு ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி..?

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. பல தரப்பில் இருந்து வெளியாகும் கருத்துக்கள் அனைத்தும் திமுக குறைந்தது 35 இடத்தில வேலும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல தகவல்களை நினைத்து அப்செட்டில் இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.


முடிந்த நாடளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிகப்படியான இடத்தில் வெல்லும் என்றும் பாஜக இரண்டாவது இடத்திற்கு செல்லும் என்று கூறப்படுவதால் அரசியல் தலைவர்கள் 2026 நோக்கி பிளான் போட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக 35 இடத்தில் வெல்லும் என்று தமிழக உளவுத்துறை ஸ்டாலின் இடம் கூறியுள்ளது. இது அதிமுக மூத்த தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜக ஐந்து இடத்தில் வெற்றி பெரும் என்பது மேலும் அதிமுகவுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் அதிமுக புது முகங்களை இறக்கி அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால், மக்களிடம் அது பெரியதாக எடுபடவில்லை என கூறப்படுகிறது. மேலும், கோவை தொகுதியில் யார் வெற்றி என்பதில் ஸ்டாலினும், பழனிசாமியும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதிமுக அங்கு தனது வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுக்கு பின் வரும் கள நிலவரம் அண்ணாமலைக்கு சாதகமாக வருவதால் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து தொகுதியின் நிலவரம் குறித்து ஆலோசித்து வருகிறாராம். ஆனால், தலைவர்களிடம் உற்சாகமாக இருப்பது போல் காட்டி கொண்டாலும் வெளியில் கவலையாக இருந்து வருகிறாராம். இது குறித்து அதிமுக மூத்த தலைவர் கூறியது, தமிழகத்தில் எப்போதும் திமுக - அதிமுக மட்டுமே அதன் பிறகு தான் வேறு கட்சிகளுக்கு இடம் என்றும் அதன் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்ததும் பெரியதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்யவில்லை. இதனால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக மீது அதிருப்தி ஏறப்டுத்தியுள்ளதால் இந்த தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தாதார் எடப்பாடி.

இந்த சூழ்நிலையில், பல நிர்வாகிகள் அதிமுக வேட்பாளருக்கு பணி செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் பல்வேறு தகவல் திமுக, பாஜகவுக்கு சாதகமாக உள்ளதால் இது கட்சிக்கு நல்லது இல்லை என்று உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தல் சாதகமாக இல்லை என்றால் அதிமுக தன் வசம் இருக்காது என்று கட்சியை எப்படி வழிநடத்துவது என இரண்டாம் கட்ட தலைவர்களிடம் பேசி வருகிறாராம். தலைவர்கள் எல்லோரும்  பாஜகவுடன் கூட்டணி சீராக்கலாம் என கூற அதனை மறுத்து வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளார். 

ஏற்கெனவே, தேர்தலுக்கு பிறகு அதிமுக உண்மையான தொண்டரிடம் செல்லும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேனீ தொகுதியில் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்போது கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேர்தல் ரிசல்ட்க்கு பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விலகலாம் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.