
தமிதமிழக அரசியலில் மேடைப் பேச்சுகளும் விளம்பர வெளிச்சங்களும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், அந்த வெற்று ஆரவாரங்களுக்கு மத்தியில் சொல்லால் அல்லாமல் தன் அசுரத்தனமான செயலால் முத்திரையைப் பதித்து வருகிறார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவருமான திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள்
குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு முதல் "கோவை மக்கள் சேவை மையம்" வாயிலாக அவர் முன்னெடுத்து வரும் "மோடியின் மகள்" திட்டம், தந்தை இல்லாத ஏழை பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலான 150 குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 10,000 கல்வி உதவித்தொகை வழங்கி வரும் இந்த உயரிய பணி, அக்குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. வருடந்தோறும் பண்டிகை நாட்கள் வரும்போதெல்லாம் தந்தையை இழந்து , தாயின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்குப் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி அவர்களின் இல்லங்களில் உண்மையான மகிழ்ச்சியை ஏற்றியுள்ளார் வானதி சீனிவாசன்.
மறுபுறம், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமதி. கனிமொழி அவர்கள், தேர்தல் நேரத்து வாக்குறுதிகளோடு சரி, தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பதே அரிதாக உள்ளது என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. ஏன் தொகுதி மக்களே கனிமொழியை விரட்டி விடும் சூழ்நிலை தான் உள்ளது. எப்போது பார்த்தாலும் எதாவது அறிக்கையை விடுவது மத்திய அரசை குறை சொல்வதில் அவரின் பதவி காலமே முடித்துவிடுகிறார் கனிமொழி. வெறும் அறிக்கைகளிலும் சமூக வலைதளப் பதிவுகளிலும் மட்டுமே அரசியல் நடத்தும் கனிமொழி போன்றவர்களுக்கு மத்தியில், வானதி சீனிவாசன் அவர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெண்களின் பாதுகாப்பிற்காக "அரண்" போன்ற பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது, தையல் பயிற்சி மற்றும் சிறு தொழில் முனைவோருக்கான உதவிகள் மூலம் பெண்களைப் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடையச் செய்வது என அவரது பணிகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அவர் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது. தமிழக அரசியலில் இதுதான் பா.ஜ.க-வின் பாணி என்பதையும், மக்களின் துயர் துடைக்க அதிகாரமோ பதவியோ தடையாக இருப்பதில்லை என்பதையும் வானதி சீனிவாசன் தனது அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவையின் மூலம் மெய்ப்பித்து வருகிறார்.
