
தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் வியப்புடன் உற்றுநோக்கி வருகின்றன. குறிப்பாக, ஈரான்-இஸ்ரேல் மோதல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 60 டாலரிலிருந்து 110 டாலரை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. பல வளர்ந்த நாடுகளில் பணம் கொடுத்தாலும் எரிபொருள் கிடைக்காத அவல நிலை நீடிக்கிறது. ஆசிய நாடுகளில் கம்போடியா 68 சதவீதமும், வியட்நாம் 50 சதவீதமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே 22 சதவீத விலை ஏற்றம் காணப்படுகிறது. கனடா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகள் வரிசையாகத் தங்கள் நாட்டு மக்களுக்கு எரிபொருள் சுமையை ஏற்றியுள்ளன. உலகிற்கே கச்சா எண்ணெய் வழங்கும் மத்திய கிழக்கு நாடுகள் கூட தங்கள் உள்நாட்டு விலையை உயர்த்தியுள்ள நிலையில், 145 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, தனது தேவையில் 85 சதவீத எண்ணெயை இறக்குமதி செய்தும் கூட, ஒரு பைசா கூட விலையை உயர்த்தாமல் சாதித்துக் காட்டியுள்ளது.
இந்த இமாலய சாதனையைச் சிதைக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வதந்திகளைப் பரப்பி, எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கியும், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்க முயன்றும் தோற்றுப் போயின. ஊழலற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தால் மட்டுமே இத்தகைய பொருளாதாரச் சீரமைப்பைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு மோடி அரசு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் சஉலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் நீரிணையில் (Strait of Hormuz), ஈரான் அரசுடன் எந்தவிதமான முறையான (Formal Deal) ஒப்பந்தமும் இல்லாமலேயே இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்கின்றன
ஒருபுறம் உலகளாவிய நெருக்கடி நிலவினாலும், மறுபுறம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகப் பல லட்சம் கோடிகளைச் செலவிட்டு இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் மோடி வழிநடத்துகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் உலக நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கி உயிர்காத்த மனிதாபிமானச் செயலை உலகம் இன்னும் மறக்கவில்லை. இதனால்தான் ஆஸ்திரேலிய பிரதமர் ஒரு பொது மேடையிலேயே "மோடிதான் பாஸ்" எனப் பெருமிதத்துடன் முழங்கினார். இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெரும் மரியாதை கிடைப்பதற்கும், பதற்றமான சூழலிலும் இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கும் பிரதமர் மோடியின் ராஜதந்திரமே காரணம். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் வீணான விமர்சனங்களைத் தாண்டி, உலக அரங்கில் இந்தியாவின் பிம்பம் உயர்ந்து நிற்பதே நிதர்சனமான உண்மை. இன்று உலக நாடுகள் இந்தியாவை மரியாதையுடன் பார்க்கின்றன என்றால், அதற்கு பிரதமர் மோடியின் அசைக்க முடியாத தலைமைத்துவமே காரணம்!
