24 special

அண்ணாமலை குறித்து அவசரப்பட்டு வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி ...! மொத்தமும் போச்சு ...!

Edappadi palanisamy ,annamalai
Edappadi palanisamy ,annamalai

சொத்துப்பட்டியலை வெளியிட்டு அண்ணாமலை போட்ட ஒரே போடு தமிழகத்தில் பல அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ளது. 


அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் லட்சக்கணக்கான கோடி சொத்து பட்டியல் மக்கள் மத்தியில்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்துவிட்டது. திமுகவினர் செய்தது அரசியல் அல்ல வியாபாரம் என திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு தமிழக அரசியலில் பேசு பொருளாக இந்த விவகாரத்தை அண்ணாமலை மாற்றிவிட்டார். மேலும் இது அண்ணாமலை எடுத்து வைத்திருப்பது முதல் அடிதான்.

இந்த சொத்து பட்டியல் விரைவில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைக்கு செல்லும்! அப்படி செல்லும் பொழுது அவர்கள் இதை தனியே கையில் எடுத்து விசாரிக்க கூடும், அப்படியே விசாரித்தால் பல உண்மைகள் வெளியில் வரும் அதுவும் 2024 தேர்தலை அனைத்து கட்சியினரும் சந்திக்கவிருக்கும் நிலையில் இப்படி பல திமுக தலைவர்கள் மற்றும் எம்பிகளின் சொத்து பட்டியலை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரித்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியல் தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் மத்தியில் எங்கே தனக்கும் அந்த பிரச்சனை வந்து விடுமோ என பயப்படவைத்துவிட்டது. இந்த பயம் எடப்பாடி பழனிசாமிக்கும் வந்துவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை எங்கே தனது சொத்து பட்டியலையும் வெளியிடுவாரோ என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தற்பொழுது பயந்து கொண்டு இருக்கிறது, அந்த பயத்தின் விளைவாக அண்ணாமலை பத்தி என்கிட்ட கேட்காதீங்க என எடப்பாடி பழனிச்சாமி டென்ஷன் ஆகியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், "பாஜக  தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா?  என்பது தெரியவில்லை. பத்திரிக்கைகளில் சொத்துப்பட்டியல் வெளியிட்டது குறித்து பார்த்தேன்" என முதலில் சாதாரணமாகத்தான் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறாரே ? என விடாமல் எழுப்பிய கேள்விக்கு, "அவரைப் பற்றி பேச வேண்டாம்,  அண்ணாமலை பேசிப் பேசியே  பெரிய ஆளாக நினைக்கிறார்.

நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எனவே கட்சியில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது எனக்கு தெரியும். தயவுசெய்து அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். அவரைப் பற்றிய  கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்" என எடப்பாடியின் கோபம் மற்றும் ஆதங்கம் அதிகமானது.

அதிமுக பொதுச்செயலாளர் என்ற இடத்தை பிடித்திருக்கும் வரை  வளர்ந்திருக்கும் தனக்கும் இது போன்ற சொத்து பட்டியல் வெளிவந்து ஆபத்து ஏற்பட்டு விடுமோ? ஏற்கனவே முதல்வராக இருந்திருக்கிறோம் அந்த சமயத்தில் நடந்த விவகாரங்கள் வெளியில் வந்துவிடுமோ என எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் உள்ளதாக தெரிகிறது.

அண்ணாமலை வெளியிடும் சொத்து பட்டியலில் தனது பெயரும் இருந்துவிட்டால் என்ன நடக்குமோ என்றும் அப்படி சொத்து பட்டியல் வெளியானால் கண்டிப்பாக தனக்கு அரசியலில் இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எடப்பாடி தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது. இதற்கு 'எடப்பாடிக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் இல்லாமல் இருக்க வேண்டியதுதானே? அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டால் இவர் ஏன் பதட்டப்பட வேண்டும் அப்படி என்றால் இவரும் அந்த பட்டியலில் இருக்கிறாரா?' என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.