24 special

விசாரனைக்கு ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால்..! டெல்லியில் பரபரப்பு..!

Aravind kejarwal
Aravind kejarwal

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார்.


டெல்லி மதுபானக் கொள்கை வழக்கின் முழுவிபரம்...கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் 

கைது செய்தனர். விசாரனைக்கு முறையாக ஒத்துழைப்பு தராத காராணத்தால் அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள் மணிஷ் சிசோடியாவை டெல்லி திகார் சிறையில் வைத்து விசாரிக்க உத்திரவிட்டனர். அதனையடுத்து மணிஷ் சிசோடியா சிறை சென்றார்.

2016 ஆம் ஆண்டு அரசியல் தகவல்களை ரகசியமாக கண்கானிக்க தனி அமைப்பை உறுவாக்கி அதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை ரகசிய அமைக்கு வழங்கியதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மனீஷ் சிசோடியா அவருடைய பதவியை தவறான முறையில் பயன்படுத்தி நகர அரசாங்கத்தின் கருத்து பிரிவை  “அரசியல் துப்புரவு பணிக்காக” பயன்படுத்தியதும் தெரியதவந்ததையடுத்து அவர் மீது புதிய வழக்கையும் மத்திய புலனாய்வு பிரிவு பதிவு செய்தனர்.

இதையடுத்து,  “டெல்லி அரசின் பின்னூட்ட பிரிவில் ஊழல் தடுப்பு ஆலோசகராக இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் சிபிஐ அதிகாரிகள் புதிய வழக்கை பதிவு செய்தனர். மேலும் பின்னூட்ட பிரிவுகள் நியமனங்களில் மாநில ஆளுநரிடம் முறையாக எந்தவொரு அனுமதியும் வாங்காமல் செயல்பட்டதற்காகவும், பின்னூட்ட பிரிவு அரசியல் உளவுத்துறையின் முக்கிய தகவல்களை சேகரித்தாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்”.

இதனை தொடர்நது, டெல்லி மதுபானக் கொள்கையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்த மத்திய புலனாய்வு பிரிவு இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் படி நோட்டிஸ் அனுப்பியிருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரனைக்காக அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகிறார்.

மேலும்  “விசாரனைக்காக ஆஜராகும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பல நிர்வாகிகள் உடன் செல்வதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்காரணமாக டெல்லியில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க டெல்லி போலீஸார் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது”.