முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமறைந்த பிறகு அதிமுக கட்சி பல பிளவுகள் கண்டுள்ளது. முதலில் சசிகலாவை வெளியேற்றியது,பின்னர் பன்னீர் செல்வம் வெளியேறியது, தினகரன் புது கட்சி தொடங்கியது என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதன் பின் எடப்பாடி தலைமையிலான அதிமுக 10 தேர்தல்களை சந்தித்துள்ளது ஆனால் அனைத்திலும் தோல்வி. அதற்கு காரணம் பாஜக என குற்றம் சாட்டியது பாஜகவல் தான் சிறுபான்மை ஓட்டுகள் வருவதில்லை என பேச ஆரம்பித்தார்கள்.ஆனால் அது துளியளவும் உண்மையில்லை என இந்த நாடாளுமன்ற தேர்தல் உறுதிபடுத்தியுள்ளது. தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் வேகமாக வளர்ச்சியை கண்டது. அதனால் அதிமுக கூட்டணி இல்லாமால் களம் கண்டது இதில் பா.ஜ.கவுக்கு மிகப்பெரும் வெற்றியை அளித்துள்ளது. ஆம் அவர்களின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்தை தாண்டியது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் தலை தூக்கியுள்ளது தேர்தலில் 34 தொகுதிகளில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடங்களை கூட கைப்பற்றவில்லை.
மேலும், போட்டியிட்ட 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த தென் மாவட்டங்களில் வாக்குகள் கடுமையாக சரிந்துள்ளனநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எழுந்துள்ள மாற்றுக் கருத்துக்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எவ்வாறு இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தலைவர்கள் மாறி மாறி கருத்து கூறி வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடித்த முயலுக்கு 3 கால் என அடம் பிடித்து வருவது அதிமுக தொண்டர்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ''2026 சட்டமன்ற தேர்தலில் இதே நிலை தொடர்ந்தால் அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும்" என்று அதிமுகவினரே சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்றைய தேதியில் ஆளும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் அதை அறுவடை செய்யாமல் அதற்கான வியூகம் அமைக்காமல் திமுகவின் வெற்றிக்கு எடப்பாடிதான் உதவுகிறாரா என்ற கேள்வி அதிமுவினரிடையே எழுந்துள்ளது.
குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தை அதிமுக கோட்டை விட்டது பேசுபொருளானது. அதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ''அதிமுக-பாஜக கூட்டணி பிளவு ஏற்பாடாமல் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்கள் கிடைத்து இருக்கும்" என கருத்து கூறினார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவோ, அதேபோல, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை கட்சியில் இணைத்துக்கொள்ளவோ விரும்பவில்லை. இதனால் தான் திமுக அசராமல் வெற்றி அடைந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பாஜக பிரித்திருப்பதும், சில தொகுதிகளில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளியிருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்தாலும், எடப்பாடி பழனிசாமி அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. மேலும், தேர்தலுக்கு முன்பு திமுக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும் என்று கூறியிருந்தார்.அதற்கேற்றாற் போல் தான் எடப்பாடியின் செயல்பாடும் இருக்கிறது.
"கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியை கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்ற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், அதிமுகவில் தற்போது நிலவி வரும் மாற்று கருத்துக்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது? 2026 தேர்தலுக்கான முன்னெடுப்புகள் என்னென்ன? நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பினை எவ்வாறு சரி செய்வது? நிர்வாகிகளுக்கிடையே எழும் குழப்பங்களை எப்படி கலைப்பது என்பதையெல்லாம் குறித்து ஆலோசனை நடத்தப்படுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.