Cinema

நடிகை அபர்ணாதாஸ் திருமணத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?? இப்படித்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு என உண்மையை உடைத்த அபர்ணா தாஸ்!!

APARNA DAS
APARNA DAS

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளவர் தான் அபர்ணா தாஸ்!! கடந்த 2018 ஆம் ஆண்டில் மலையாள மொழியில் வெளியான நஞ்சன் பிரகாஷன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து மலையாளத்தில் நடித்த வந்த இவர் 2022 ஆம் ஆண்டு மிருகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான டாடா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமாவில் கிடைத்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் தீபக் பரம்பொல் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரின் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்!! கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடிகை அபர்ணாதாஸ் மற்றும் தீபக் பரம்போல் ஆகிய இருவரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையங்களில் மிகவும் ட்ரெண்டாகி அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. ஹெல்தி, வெட்டிங்,  ரிசப்ஷன்  போன்ற அனைத்து நிகழ்வுகளும் இணையங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பரவி வந்தது. இதனிடையே இவர்கள் இருவரின் ரசிகர்களும், சினிமா துறையை சார்ந்தவர்களும் திருமணத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அபர்ணாதாஸ் திருமணம் செய்த தீபக் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சமீபத்தில் பிரபலமானார். இவரும் அபர்ணா தாஸ் ஆகிய இருவரும்  2019ஆம் ஆண்டு வெளியான மனோகரம் என்ற மலையாள திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றி உள்ளனர். இந்த வரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அபர்ணாதாஸ் இவர்களின் காதல் கதையை பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 

வடக்கஞ்சேரியில் உள்ள ஹோட்டலில் நடிகர் தீபக்கை அபர்ணா முதல் முதலாக பார்த்ததாகவும், அங்கு சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்ற போது நடிகர் தீபக்  அபர்ணாவை பார்த்து வணக்கம் வைத்ததாகவும், அதில் அவர் மீது ஒரு நல்ல எண்ணம் அபர்ணாவிற்கு தோன்றியதாக கூறியுள்ளார். அதன் பிறகு மனோகரன் திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் சந்தித்தபோது அபர்ணாவை யார் என்று தெரியாதது என நடிகர் தீபக் கூறியுள்ளார். அதன் பிறகு மனோகரன் திரைப்படத்திற்காக அபர்ணாவை தீபத்தான் பரிந்துரை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அபர்ணாவை காதலிப்பதாக தீபக் கூறிய விதம் மிகவும் பிடித்ததாக அபர்ணா தாஸ் கூறியுள்ளார். 

தீபக்  அவரின் காதலை கூறும் பொழுது தன்னிடம் இவ்வளவுதான் வங்கி இருக்க உள்ளதாகவும், தன்னிடம் கோபப்படும் குணம் இருப்பதாகவும், திரைப்படங்கள் எதுவும் வாய்ப்பு இல்லாவிட்டால் கஷ்டப்படுவேன் என்றும், நான் இருக்கும் வரை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றும், உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சூப்பராக ப்ரபோஸ் செய்துள்ளார். இவ்வாறு அவர் காதலை வெளிகாட்டிய விதம் அபர்ணாவிற்கு பிடித்துப் போக உடனே ஓகே சொல்லி உள்ளார். அதன் பிறகு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இது பற்றி கூறி அவர்கள் ஏற்றுக்கொண்ட  பிறகு ஒன்றாக பல இடங்களுக்கு சென்றோம். நான் இந்த விஷயம் மீடியாவிற்கு தெரியாமல் மிகவும் கவனமாக இருந்தோம். இவ்வாறு பல ஆண்டுகளாக காதல் செய்து வந்த நிலையில் தற்போது மிகவும் சிம்பிளாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டோம் என்று அபர்ணா தாஸ் கூறியுள்ளார்!!