தளபதி விஜய் நடிப்பின் கடந்த வாரம் 19ம் தேதி வெளியான லியோ படத்தின் தேதி இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் நோ மியூட்உடன்படத்தை கான் ஆவலுடன் இருப்பதாக மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ஆயுதபூஜை விடுமுறை நாளான 19ம் தேதி வெளியானது.
இந்த படம் பாண் இந்திய மொழியான தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய மொழியில் உருவாகியிருந்தது. படம் வெளியான முதல் நாளே 148 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்திருந்தது. லியோ படம் மேலும் 1000 கோடியை எட்டும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படம் வெளியான ஒருவாரத்தில் 460 கோடி எட்டியதாகவும் படக்குழு வெளியிட்டதை ரசிகர்கள் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முந்தியதாக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் லியோ படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆனதால், படம் ஓடிடியில் வெளியாகும் தேதி இணையத்தில் பரவ வருகிறது. அதும் ஓடிடி தளத்தில் திரையரங்கில் பார்க்க முடியாத வார்த்தைகளை சென்சார் கேட் இல்லாமல் ஓடிடியில் பார்க்கலாம் என்ற தகவலும் தீயாக பரவி வருகிறது. லியோ படத்தின் ட்ரைலரில் ஒருவார்த்தை விஜய் பேசுவார் அதற்கு சர்ச்சை எழுந்த நிலையில் அந்த வார்த்தைக்கு மியூட் போடப்பட்டது.
அதன் பிறகு சென்சார் போர்டும் இந்த படத்திற்கு 13 இடத்தில் மியூட் செய்ததாகவும் கூறியது. இதனால் படம் வெளியான போது மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கில் அந்த வார்த்தையை கான சென்ற ரசிகர்களுக்கு பாதி இடத்தில் மியூட் போடப்பட்டது. மேலும் நா ரெடி தான் பாடலில் முழுவது லிரிக்ஸ்ன் வார்த்தைகளுக்கு மியூட் போட்டதால் படத்தை பார்த்தவர்கள் கலவையான விமர்சனத்தை முன் வைத்தனர். இருப்பினும் படத்தின் வசூலில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.இதற்கிடையில் வரும் நவம்பரில் லியோ படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
லியோ படத்திற்கான அப்டேட்கள் வெளியாவதற்கு முன்னரே ஓடிடி நிறுவனம் படத்திற்கான பிஸ்னஸை ஆரம்பித்து முடித்தது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளதால், வரும் நவம்பர் 17 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என தகவல் பரவி வருகின்றன. மேலும், அதிகாரபூர்வமான தகவல் வரும் நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது திரையரங்கில் வெளியாகும் படத்திற்கு அதிகபட்ச்சமாக 15 நாட்கள் கழித்து ஓடிடி தளத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. லியோ படத்தினை ஓடிடி தளத்தில் பார்க்க அதிக எதிர்பார்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.