24 special

அமித்ஷாவை சந்திக்க காத்திருக்கும் எடப்பாடி...!

Amitsha,eps
Amitsha,eps

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்த பொழுது அண்ணாமலையும் உடன் இருந்தார். மேலும் அமித் ஷா தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியே தொடரும் எனவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தை முடிவில் வெளியில் வந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறினார்.


இது மட்டுமல்லாமல் அந்த சந்திப்பில் அமித் ஷா தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக  கூறியுள்ளார். மேலும் அந்த 20 தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்து வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுகொண்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு தமிழக பாஜக நிர்வாகிகளிடமும் 20 தொகுதிகளில் நாம் போட்டி போட வேண்டும் என்றால் எந்தெந்த தொகுதி என்பதை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கள பணிகளை செய்வதற்கான ஆலோசனைகளை பாஜகவின் மூத்த நிர்வாகிகளோடு மேற்கொள்ளவும் வேலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவும்  இன்று சென்னை விஜயமாகிறார் அமித் ஷா. மேலும் பிரதமராக நரேந்திர மோடி தனது ஆட்சி பொறுப்பை ஒன்பது ஆண்டு காலம் நிறைவடைந்து உள்ள நிலையில் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் மத்திய அரசு செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்து க் கூற பாஜக நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடு முழுவதும் கூட்டங்களை பாஜக நிர்வாகிகள் நடத்தி வருகின்றன. இதன்படியே வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த கந்தனேரியில் நடைபெறவுள்ள பாஜகவின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். 

முன்னதாக இந்த கூட்டம் ஜூன் 8-ம் தேதியே நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது பிறகு அமித்ஷாவின் வருகை தாமதமானதால் இந்த கூட்டத்தையும் நாளை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் பாஜக நிர்வாகிகள். இதனால் இன்று இரவு உள்துறை அமைச்சர் சென்னை வருகை புரிந்து எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது. அமித் ஷாவின் இந்த தமிழக வருகையின் போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா'வை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதாவது கடந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்று அமைச்சர்

கூறிய பிறகு பாஜக போட்டியிட உள்ள 20 தொகுதிகளை தேர்ந்தெடுங்கள் என்று கூறினார், அதன்படி எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கான தொகுதிகள் பற்றி கலந்துரையாடி மற்ற பிற ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வேறு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் என்றால் அதனை செய்ய தயாராக உள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம்  கூற உள்ளதாகவும், இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அதன்படியே மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி சந்திக்கும் சமயம் அண்ணாமலையும் உடனிருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.