24 special

எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பு....சட்டசபையில் இருந்து வெளியேற்றம்!

edapadi
edapadi

சட்டப்பேரவை கூடத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியதில் இருந்து விவாதம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளான சட்டப்பேரவை தொடங்கியதும் விவாதம் முழுமையாக இல்லை என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை தலைவர் வெளியேற உத்தரவிட்டுள்ளார்.சட்டப்பேரவை தொடங்கிய (09.10.2023) அன்றே சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு மேற்கொண்டனர்.அதிமுகவின் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்குமாறு மீண்டும் கோரிக்கை வைத்திருந்தனர்.


இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கக் கோரி 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம்'' என பேசினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், ''இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்க உரிமை இல்லை. இருக்கை விவகாரத்தில் சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன். ஒரு சின்னத்தில் வெற்றி பெற்றவர் சின்னம் மாறி போனால் அதன்படி சட்டப்படி பதவியில் இருந்து நீக்கலாம்.

விதிப்படி, சட்டப்படி முழுமையாக யாருடைய மனம் நோகாமலும், உரிமையை பறிக்காமலும் அவை நடைபெறுகிறது' என சபாநாயகர் தெரிவித்தார்.இதனால் எடப்பாடி தரப்புக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே சட்டப்பேரவையில் அமளி  ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆவேசமாக கோஷங்கள் எழுப்பியபடி அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர். வெளியில் வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் சந்திக்கையில் கிடத்திட்ட 10 முறை சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும், 3 சட்டமன்ற உறுப்பினர் குறித்தும் சட்டப்பேரவை தலைவர் அறையில் கடத்தல் கொடுத்திருந்தோம்.

எங்களது கோரிக்கைகை ஏற்காமல் மீண்டும் ஓபிஎஸ் அமரவைத்து தொரடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதால் எங்களை வெளியில் அனுப்பினார். சட்டப்பேரவை தலைவருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை நாங்கள் மதிக்கிறோம். "எங்களது நியாயமான கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார்". எதிர்க்கட்சி தலைவர் அமரும் இருக்கையில் தான் எதிர் கட்சி துணைத்தலைவர் அமர வேண்டும் அதனை முழுவதுமாக நிராகரித்து விட்டார் சட்டப்பேரவைத்தலைவர் என்று விமர்சித்தார். நடுநிலையோடு செயல்படவேண்டிய சட்டப்பேரவை தலைவர் இன்று ஒரு நிலையோடு செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். 

எதிர்கட்சித்தலைவர்கள் கேட்க்கும் கேள்விக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் ஆனால் பெரும்பாலான கேள்விக்கு பேரவைத்தலைவர் பதில் சொல்கிறார். இது எந்த விதத்தில் நியாயம் மக்களுடைய பிரச்னையை ஆளும் கட்சியிடம் கெடக்கும்பொழுது அதற்கு அவை தலைவர் குறுக்கிட்டு இவரே பதில் சொல்லுகிறார் அமைச்சர் பதில் கூறாமல் இருக்கின்றனர். அதனால் எங்களது கோரிக்கை முழுவதுமாக நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் அதிமுக வெளியேறியதற்கு  பல கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிப்பது இனிமேல் தான் அதிமுகவில் பிரச்னை தொடங்கப்படுவுள்ளது என்றும் இதுநாள் வரை பாஜகவில் இருந்தால் எவ்வித பிரச்சனையும் சந்திக்காமல் இருந்ததாகவும் கூறுகின்றனர். மேலும்,கொடநாடு கொலை வழக்கில் யார்குற்றவாளி என்று விரைவில் தெரியவரும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்ர் ஸ்டாலின் கூறியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.