24 special

அமலாக்கத்துறை அதிகாரி கைது....அரசுக்கு முக்கிய பங்கு? வெளியான தகவல்!

ED, Stalin
ED, Stalin

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம் தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை ஈடுபட்டனர். தமிழகத்தில் அமைச்சர்கள், பொது நிறுவனம் மீது குறி வைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இப்போது அமலகாத்துறை மீதே லஞ்ச ஒழிப்பு துறை பார்வை சென்றுள்ளது.


திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் டாக்டர். சுரேஷ்பாபு என்பவர் மீது 2018ம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய அவர் மீது வருமான வரித்துறை சோதனை செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் துணை அமலாக்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அங்கித் திவாரி, 2022 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் இணைந்துள்ளார்.  2018ம் ஆண்டு நடந்து முடிந்த மருத்துவர் சுரேஷ்பாபு வழக்கு விசாரணை அங்கித் திவாரிக்கு வந்துள்ளது. இந்த வழக்கு மீது விசாரிக்காமல் இருக்க மருத்துவரிடம் 50 லட்சம் கேட்டுள்ளார். முன்பணமாக அங்கித் திவாரி 20 லட்சத்தை பெற்றுள்ளார் இதனை சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அமலாக்கத்துறையை சேர்ந்த அங்கித் திவாரியை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வேறு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா என்ற விசாரணையில் அமலாக்கத்துறை அலுவலகத்தை இரவு முழுவதும் சோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல் அமலாக்கத்துறை அதிகாரி அரசு ஊழியர்களை பல வகைகளில் பணத்தை கேட்டு மிரட்டி இருப்பதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணிகளை மேற்கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. "சட்டத்திற்கு புறம்பாக மற்ற மருத்துவமனைகளுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்" என அறிகையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சோதனைகள காரணம் தமிழக அரசு தான் காரணாம் என தகவல் கசிந்துள்ளன, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தது, கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், வரும் நாட்களில் பெரிய புலிகளின் மீது அமலாக்கத்துறை பார்வை பட்டதால் அதனை திசை திருப்பி மக்களிடம் ஆதரவை பெறவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு சீண்டியது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரி மீது கைவைத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழக அரசு பெரும் விளைவுகளை சந்திக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தி தமிழக அரசு அரசியலாக்கி வருகிறது, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அமலாக்கத்துறையை மொத்தமாக மூட வேணும் என விமர்சனம் செய்து வருகிறார். இதனால் தேர்தலுக்கு முன்னே தமிழக அரசு இதற்கு பதிலடி கிடைக்கும் எனவும் அரசியல் விமர்சகர்களால் கூறபடுகிறது. எதிர்காலத்தில் திமுக சந்திக்கும் பிரச்சனை நோக்கி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.