இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. இந்த போரை இரு நாடும் இடைக்காலமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவித்தனர். தற்போது இந்த போருக்கு அமெரிக்க அதிபர் அறிவுரை கூறியுள்ளார். இதன் மூலம் போர் முடிவுக்கு வருகிறாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேல் அருகில் உள்ள பலஸ்தீனதின் ஒரு பகுதியாக காஸா உள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் ஒரு மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதல் போக்கு கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போராக மாறியது. இந்த மோதலில் இரு நாட்டில் இருந்தும் உயிரிழப்புகள் 10 ஆயிரத்தையம் கடந்தது.
இந்த போரின் நடுவில் இரு நாடுகளும் அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்தது. இதனால் இஸ்ரேல் மக்கள் அந்த அரசுக்கு எதிராக போர் கோடி தூக்கி மக்களை விடுவிக்க போராட்டம் நடத்தியது. அதன் பேரில் இரு நாடுகளும் பேசி முடிவு எடுத்து மக்களை விடுவிப்பதற்காக ஒரு வாரத்திற்கும் மேலாக போருக்கு இடைக்கால தடை விதித்தது. அப்போது மற்ற நடுக்களும் இது இடைக்கால தடை போல் தெரியவில்லை பரஸ்பரதிற்கு எட்டியதாக கூறப்பட்டு வந்தது. அப்போது, ஹமாஸ் அமைப்பினர் காச மருத்துவமனையில் புகுந்து ஆயுதம் கடத்தப்படுவதாக இஸ்ரேல் அரசு வீடியோ வெளியிட்டு குற்றம் சுமத்தி வந்தது. போர் நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் - ஹமாசிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என கூறப்பட்டன.
தற்காலிக போர் நிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காசாமுனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 180 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்திய்ப்படாமல் போனதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாகவும், காசாவில் இறந்துபோன இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தாங்கள் முன்வந்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என ஹமாஸ் அமைப்பு கூறிவருகிறது. இதனை உலக நடுகல் எல்லாம் திரும்பவும் வேடிக்கை பார்த்து வருவதாக இஸ்ரேல் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.