24 special

இந்தியாவுடன் கைகோர்க்கும் இங்கிலாந்து..! பாதுகாப்பு தொழில்நுட்ப பரிமாற்றம் உறுதி..!

boris johnson and modi
boris johnson and modi

உலகம் : பாதுகாப்பு தொழில்நுட்பம் தொடர்புடைய இந்திய இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான பரிமாற்றம் குறித்து இருநாடுகளும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக யுகே பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து பாராளுமன்றமான ஹவுஸ் ஆப் காமர்ஸில் இந்திய இங்கிலாந்து தொழில்நுட்ப பாதுகாப்பு பரிமாற்றம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெர்மி க்வின் இருநாடுகளுக்கிடையே கடிதப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இங்கிலாந்தின் அறிவியல் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் DRDO ஆகிய இரு ஆராய்ச்சி நிறுவனங்கள் பாதுகாப்பு பரிமாற்றத்தை மேற்கொள்ள இருக்கின்றன.

இருநாடுகளும் ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நிலையை எட்டியுள்ளது. யுகே அமைச்சரின் கூற்றின் படி கூட்டு ஆராய்ச்சி மற்றும் இணைவடிவமைப்பு, இணைமேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொழிநுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களின் கூட்டு உற்பத்தி இவற்றின் மூலம் மிக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு திறன்களை இது வழங்கும்.



கடந்த ஏப்ரலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்திருந்தார். அப்போது கூட்டுப்பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. அதில் இந்தியாவுடனான தொழில்நுட்ப தொடர்புகளை ஊக்குவிக்க பொது ஏற்றுமதி உரிமம் மற்றும் இங்கிலாந்தின் கடற்படைக்கான கப்பல் கட்டும் திட்டம் மற்றும் விமானங்கள் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றில் இந்தியா பங்குபெறும்" என கூறப்பட்டிருந்தது.

அதேபோல இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தில் இங்கிலாந்தும் சிறப்பம்சமான திட்டங்களில் பங்குபெற உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் இந்தியாவுடன் இங்கிலாந்து கைகோர்க்க உள்ளது. சமீப வருடங்களாக வல்லரசு நாடுகளுடன் கைகோர்த்துவரும் நமது இந்தியா மேக் இந்த இன் இந்தியா திட்டத்தின் மூலம் மேலைநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பயன்படுத்திக்கொள்வது குறிப்பிடத்தக்கது.