ஜெய்ப்பூர் : பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் எட்டாவது ஆண்டு இந்த மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த எட்டுவருட ஆட்சியில் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் தேச பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட விஷயங்கள் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் பிஜேபி நிர்வாகிகள் மக்களை சந்தித்து எடுத்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிஜேபி தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாடினார். அவர் பேசியதாவது " மத்திய அரசின் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எந்த ஏழையும் எந்த பயனாளியும் விடுபட்டுவிட கூடாது.
மத்திய அரசின் நலத்திட்டங்களை குறித்து நிர்வாகிகள் தொண்டர்கள் மக்களை சென்றடைய பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள். இந்த மாதத்தில் தேசியஜனநாயக கூட்டணி தனது எட்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த எட்டு ஆண்டுகளும் பல தீர்மானங்கள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கியவை. இந்த எட்டு ஆண்டுகளில் சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளுக்கு அர்ப்பணிப்பு என சாதனைகள் செய்துள்ளோம்.
சிறுகுறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தரமாக்களின் எதிர்பார்ப்புகளை எட்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்துள்ளோம். இந்த எட்டு ஆண்டுகளில் தாய்மார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2014க்கு பிறகான இந்த அரசாங்கம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறது.
பிஜேபி மீது இந்திய மக்கள் அதிக பாசத்தை காட்டுகின்றனர். பிஜேபியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். 2014க்கு பிறகு பிஜேபி மக்களை விரக்தியிலிருந்து வெளிகொண்டுவந்துள்ளது. சில அரசியல் கட்சிகள் ஒரு சிறு சம்பவத்தை கூட விஷத்தை செலுத்தி பதற்றமடைய செய்ய வழிதேடிக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் வளர்ச்சிப்பாதையிலிருந்து உங்களை திசைதிருப்ப இவர்கள் முயற்சி மேற்கொள்வார்கள்.ஆனால் அவற்றை நீங்கள் கடந்துசென்று உங்கள் கொள்கைகளை கடைபிடிக்கவேண்டும்" என தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.