நம்மிடம் இருப்பதை காட்டியும் இல்லாததை மிகைத்து பேசி விளம்பரப்படுத்தும் ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினால் மிகையாகாது! ஏனென்றால் ஒருவரது whatsapp மற்றும் இன்ஸ்டால் ஸ்டோரியை பார்த்தாலே தெரிந்துவிடும், அவர் என்ன மனநிலையில் தற்போது இருக்கிறார் என்பது! அந்த அளவிற்கு தன்னுடைய அன்றாட வேலைகளை ஒருவர் மறந்தாலும் ஸ்டேட்டஸ் வைப்பதை மறப்பதில்லை இதில் சில ஒரு படி மேல் சென்று ரீல்ஸ் செய்து பதிவிடுகிறார்கள். அப்படி அந்த ரீல்ஸில் அவர்களுக்கு கிடைக்கும் பாலவர்ஸ்கள் மற்றும் லைக்ஸ் அவர்களின் மேலும் மேலும் ரீல்ஸ் செய்யத் தூண்டுகிறது. இந்த பழக்கம் மற்றும் விருப்பமானது கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பலரிடம் தோன்றியது என்று கூறலாம் ஏனென்றால் உலகமே ஊரடங்கில் இருந்த பொழுது வீட்டிற்குள் அடைந்து கிடந்த அனைவரும் மொபைல் மற்றும் இணையதளங்களிலேயே அதிகமான நேரத்தை செலவிட்டு வந்தார்கள்.
அப்படி அவர்கள் செலவிடும் பொழுது இது போன்ற ரீலீஸ் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பதிவிடப்பட்ட பொழுது அவை அதிகமாக பகிரப்பட்டது அதிக பார்வையாளர்களையும் பெற்றது ஆகவே ஒவ்வொரு குடும்பத்தினரும் சில குடும்பப் பெண்மணிகளை இதுபோன்று youtube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணி தங்களுடைய கிரியேஷனலில் வீடியோவை பதிவிட்டு வந்தார்கள், அவர்கள் வரவேற்பையும் பெற்று தற்போது youtube பிரபலம் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்று திகழ்ந்து வருகிறார்கள் அதிலும் சில தங்களது பிசினஸையும் இதன் மூலமே வளர்த்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு இணையதள உலகத்தில் தற்போது நடக்கும் பிறந்தநாள் விழா மற்ற திருவிழாக்கள் அல்லது ஏதேனும் விசேஷ நாட்கள் எடுத்துக் கொண்டாலும் மிகவும் சிறப்பாக ஆடம்பரமாக கொண்டாடப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது சாதாரணமான விழாக்களே அப்படி ஆடம்பரமாக கொண்டாடப்பட்டு வீடியோக்கள் பதிவிடப்படுகிறது என்றால் திருமணம் என்று எடுத்துக் கொண்டால் எவ்வளவு ஆடம்பரம் அங்கு காணப்படும் என்பதை சற்று யோசிக்க வேண்டும், ஏனென்றால் திருமணம் என்று எடுத்தால் முழுக்க முழுக்க பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் அறிவுறுத்தலின் படி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் ஆனால் இன்று இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் இளைஞர்களே பார்த்துக் கொள்கிறார்கள் மேலும் அவர்கள் ஒருமுறை செய்து கொள்ளும் திருமணம் அதனால் ஆடம்பரமாகவும் மற்றவர்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்திற்கு பல லட்சங்கள் செலவழிக்கிறார்கள்.
இதனால் திருமணம் என்றாலே குறைந்தது 5 லட்சத்திற்கு குறையாமல் அதன் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்ற வகையிலான ஒரு பிம்பம் இருந்து வருகிறது. ஆனால் தற்போது அப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை உடைத்தெறிந்து சமீபத்தில் யாருமே இதுபோன்று செய்து கொள்ளாத வகையில் மிகவும் சாதாரணமாக எளிமையாக ஒரு தம்பதிகள் தங்கள் திருமணத்தை செய்து கொண்டு உள்ளார்கள். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது திருமணத்திற்காக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அந்த தம்பதிகள் வரும்பொழுது அவர்களின் நண்பர்கள் மற்றும் தம்பதிகளின் பெற்றோர்கள் மட்டுமே வருகிறார்கள் அவர்களைத் தவிர மற்ற யாருமே அங்கு இருப்பதில்லை கையில் இரண்டு மாலை மட்டுமே இருக்கிறது உடனடியாக திருமணத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து இட்டு மாலை மாற்றிக் கொண்டு அலுவலகத்திற்கு வெளியிலேயே மொபைல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டு திருமணத்தை செய்து கொள்கிறார்கள். இவ்வளவு எளிமையாக ஏதேனும் ஒரு கல்யாணத்தை சமீபத்தில் நாம் பார்த்திருக்கிறோமா கிடையாது! அந்த ஆண் பெண் அணிந்து வந்த உடையை பார்க்கும் பொழுது கூட அவ்வளவு எளிமையாக இருந்திருக்கும் இதன் மூலம் அவர்கள் எவ்வளவு லட்சங்களை சேமித்து இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்! பொறுத்திருந்து பார்க்கலாம் இவர்களைப் போன்று அடுத்து வேறு ஏதேனும் தம்பதிகள் திருமணத்தை இவ்வளவு எளிமையாக செய்கிறார்களா என்று??