24 special

வழக்கு மேல் வழக்கில் சிக்கும் ராஜேஷ் தாஸ்.. செம்ம தில் பீலா ராஜேஷ்....

RAJESH DAS, BEELA RAJESH
RAJESH DAS, BEELA RAJESH

ஒருவரது குடும்பச் சண்டை தற்போது சட்டரீதியான சண்டையாகவும் மாறி பெருமளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது என்றால் அது பெண் ஐபிஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் மற்றும் ராஜேஷ் தாஸ் இருவரும் விவகாரம்! கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இருந்த பொழுது முதல்வரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் சீண்டலில் ராஜேஷ் தாஸ் ஈடுபட்டதாகவும் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார். இந்த புகாரை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபியாக பணிபுரிந்த ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் ராஜேஷ் தாஸ் இந்த தீர்ப்பை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.


ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் ராஜேஷ் தாசின் மனுவை தள்ளுபடி செய்து அவரது தண்டனையை உறுதி செய்தது. இதனை அடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இதனால் உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கில் ராஜேஷ் தாஸ் தற்போது சிக்கி உள்ளார் அதுவும் தனது முன்னாள் மனைவி அவர் மீது கொடுத்த வழக்கினால் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குறித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பாக இருந்த சமயத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் ராஜேஷ் தாசின் மனைவியுமான பீலா ராஜேஷ் தன் கணவரோடு பிரிந்து விவாகரத்து பெறுவதற்கான வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்தார்.அதோடு தனது பெயரையும் பீலா ராஜேஷ் என்பதிலிருந்து ராஜேஷ் என்கிற தனது கணவர் பெயரை நீக்கிவிட்டு வெங்கடேஷ் என்று தனது தந்தை பெயரை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் கோடம்பாக்கம் அருகே உள்ள தையூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் பீலா வெங்கடேசன் வசித்து வந்துள்ளார்.

அப்பொழுது கடந்த 18 ஆம் தேதி ராஜேஷ் தாஸ் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டுக்குள் செல்ல முற்பட்டு அங்கு காவலாளியை மிரட்டி தாக்கியதோடு தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் இது குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் இந்த புகாரின் பெயரில் ராஜேஷ் தாஸ் மீது கோடம்பாக்கம் போலீசார் சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் என ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதோடு ராஜேஷ் தாசையும் கைது செய்தனர். முன்னதாக ராஜேஷ் தாசை கைது செய்ததற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆசை படுத்திய பொழுது திடீரென ராஜேஷ் தாஸ் பதட்டம் ஏற்படுவதாகவும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அடுத்து மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பொழுது தனக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியது அடுத்து ராஜஸ்தாசுக்கு தற்போது நீதிமன்றம் ஜாமினை வழங்கியுள்ளது. இப்படி முன்னாள் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை சட்ட வழக்குகளையும் சந்தித்துள்ளது மேலும் பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கும் ராஜேஷ் தாஸ் மீது இருப்பது வேறு ராஜேஷ் தாசிற்க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.