24 special

ஒவ்வொரு இந்தியர்களும் கொண்டாட்டம்! அதிரடி காட்டிய இந்தியா! கதறும் சீனா! ஒரே ஒரு பெயர் மட்டும் வெளிவந்தது

PMMODI,XIJINPING
PMMODI,XIJINPING

ஆப்ரஷேன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் முக்கிய அங்கம் வகித்த பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு உலகளவில் மவுசு கூடி வருகிறது. தற்போது, 450 மில்லியன் டாலர் கிட்டத்தட்ட 4100 கோடி மதிப்பில் ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது.இந்தியா இன்று உலகின் முக்கியமான ஆயுத ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக தன்னை நிரூபித்துள்ளது. குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணை உலக சந்தையில் இந்தியாவுக்கு புதிய உயரத்தை உருவாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா நாடுகளை சீனாவுடன் அடிக்கடி சீண்டி வருகிறது. இந்த  நாடுகள் ஏற்கனவே இந்தியாவிடம் பிரம்மோஸ் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது மேலும் பல நாடுகள் அதற்கான ஆர்டர்களை அனுப்பி வருகின்றனகடந்த 2022ம் ஆண்டு இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையே ரூ. 412 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


பிரம்மோஸ் என்பது இந்தியா மற்றும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணையாகும், நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல்வேறு தளங்களில் இருந்து இந்த ஏவுகணையை இலக்கு நோக்கி ஏவ முடியும்.300 கிலோ வெடிபொருட்களை சுமந்து சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த அதிவேக ஏவுகணை 450 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது. நம் முப்படைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது.. துல்லியமான குறி மற்றும் எதிரி பாதுகாப்பு அமைப்புகளை உடைத்தெரியும் திறன் காரணமாக பிரோமோஸ் ஏவுகணை ஆசியாவில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணையை இந்தியா பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதால், தேசத்தின் பொருளாதாரம் வலுப்பெறுவதோடு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

இந்த ஏவுகணை சீனாவின் ஆதிக்கத்துக்கு நேரடி சவாலாக அமைகிறது. சீனாவுக்கு எதிராக நிலம், கடல் வழிகளில் பதற்றத்தில் இருக்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு இந்தியா இந்த ஏவுகணையை வழங்குவது, ஆசியாவில் சக்தி சமநிலையை மாற்றும் அளவுக்கு முக்கியமான நடவடிக்கையாகக் கணக்கிடப்படுகிறது. “நீ எங்கள் எல்லைக்கு வந்தால்… நாங்களும் உன் எல்லைக்கு வருவோம்” எனும் செய்தியை துல்லியமாக உலக மேடையில் இந்தியா வெளிப்படுத்தி வருகிறது.

பிரம்மோஸ் உருவாக்கத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி டெசி தாமஸ் போன்றோர் மிகப்பெரிய பங்காற்றினர். ஒரு இஸ்லாமிய விஞ்ஞானியும், ஒரு கிறிஸ்தவ பெண் விஞ்ஞானியும் தேசத்திற்காக உருவாக்கிய இந்த ஆயுதம், இந்தியா மெய்யாகவே மதத்தை தாண்டி திறமைக்கு மதிப்பு அளிக்கும் நாடு என்பதை உலகத்துக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

இந்த ஆயுதத்தின் மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால் உத்தரப் பிரதேசத்தில் புதிய உற்பத்தி நிலையங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. அதிகரிக்கும் தேவைக்கேற்ப இந்தியா இதன் உற்பத்தி திறனை பல மடங்காக உயர்த்தியுள்ளது. ஆயுத ஏற்றுமதியின் மூலம் இந்தியா தனது சர்வதேச அடையாளத்தை மாற்றி எழுதத் தொடங்கியுள்ளது.பிரமோஸ் என்ற பெயரைக் கேட்டாலே சிலர் மனதில் பயத்தை ஏற்படுத்துகிறது'' என்று தீபாவளி பண்டிகையையொட்டி ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்கள் மத்தியில் பேசும் போது பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திர பிரேதசம் ராமரின் மண்ணில் இருந்து உலகின் மிகத் துல்லியமான ஆயுதங்களில் ஒன்றான பிரம்மோஸ் உலக நாடுகளுக்கு வழங்க உள்ளது  , இது உலக வல்லரசுகளுக்கிடையே  புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆயுத வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இந்தியா எழுத தொடங்கியிருப்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.