24 special

யார் அப்பன் வீட்டு காசு? நிலம் வாங்கணும்னா அரசு நிதியில வாங்குங்க.. அறநிலையத்துறையை ஓடவிட்ட நீதிமன்றம்

MKSTALIN,COURT
MKSTALIN,COURT

தமிழகத்தில் இந்து கோவில்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மதம் சர்ச்சுகள் மற்றும்  மசூதிகள் அவரவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக கோவில்களில் வரும் வருமானம் தமிழக அரசுக்கு முதுகெலும்பாக உள்ளது. திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையானது கொள்ளை அடிக்கும் துறையாக மாறி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. திமுக அரசின் ஆட்சியில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை , முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதைத் தவிர ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். 


மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோவில்களை மட்டுமே குறி வைத்து ஆட்சி நடக்கிறது. அப்படி என்ன இந்து மக்கள் மேல் கோவம் என்றுதான் புரியவில்லை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை, கருணாநிதியின் நினைவிடத்தில் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை வைப்பது, திருவண்ணாமலை கோபுரத்தை மறைத்து வணிகவாளகம் கட்டுவது,மாசாணி அம்மான் கோவில் நிதியை எடுத்து ரிசார்ட் கட்டுவது, சென்னிமலை முருகன் கோவில் ஆக்கிரமிப்பு, பழனி முருகன் கோவிலில் பிரச்சனை என நீண்டு கொண்ட போகிறது. 

இதற்கிடையில் பழநி கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு அடிப்படை வசதி​கள் செய்ய 58.77 ஏக்​கர் நிலம் கையகப்படுத்​து​வதற்​கு, இந்து சமய அறநிலையத் துறை நிர்​வாக நிதியி​லிருந்து ரூ.58.54 கோடி செல​விட உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு இடைக்​கால தடை விதித்​துள்​ளது.பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, பழனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 58.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. இதற்காக, அறநிலையத்துறையின் நிர்வாக நிதியிலிருந்து ரூ.58.54 கோடி செலவிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அறநிலையத்துறையின் நிர்வாக நிதி என்பது, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் நிதிகளின் தொகுப்பு ஆகும். இந்த நிதியை, அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அறநிலையத்துறை அலுவலகங்களின் அன்றாட செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நிலம் வாங்குவது போன்ற வேறு எந்த நோக்கத்திற்காகவும் 

அவ்​வாறு பயன்​படுத்​து​வது இந்து மக்​கள் மீது விதிக்​கப்​படும் வரி​யாக கருதப்​படும். எனவே, பழநி பகு​தி​யில் 58.77 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்த, அறநிலை​யத் துறை​யின் நிர்​வாக நிதியி​லிருந்து ரூ.58.54 கோடி எடுக்க அனு​மதி வழங்கி பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்​டும். அது​வரை அந்த அரசாணையை செயல்​படுத்த இடைக்​கால தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் அனிதாசுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள், “பழநி கோயிலைச் சுற்​றி​ உள்ள நிலங்​களை கையகப்​படுத்​து​வதற்​காக, அறநிலை​யத்துறை​யின் நிர்​வாக நிதி​யைப் பயன்​படுத்த தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த மனு, ஏற்​கெனவே இது​போன்ற வழக்கு நிலு​வை​யில் உள்ள அமர்வு விசா​ரணைக்கு மாற்​றப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்​.