
சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளது எதிர்க்கட்சியினர் அமைச்சர்களிடம் கேள்விகேட்டால் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முந்தி கொண்டு பேசி வருகிறார். எதிர்க்கட்சியினர் எழுந்து நின்றால் போதும் அப்பாவு மைக் தானாக பேசும் அந்த அளவிற்கு அப்பாவுவின் நடவடிக்கைகள் உள்ளது. மக்களே முகம் சுளிக்கும் அளவிற்கு சபாநாயகரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. அவை மரபுப்படி, எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால் திமுக கூட்டணி கட்சியினருக்குமே மட்டுமே அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சி பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை. கூட்டணி கட்சியினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானங்களை பேசும் போது நேரலை செய்கிறார்கள். ஆனால் பாஜக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது நேரலை செய்யவில்லைமேலும் தங்கள் தொகுதியில் மற்றும் தமிழகத்த்தில் நடக்கும் மக்கள் பிரச்சனையையே தான் சட்டப்பேரவையில்பேசுகிறார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது? அவை தலைவர் அப்பாவு ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வது ஏன்?" என கேள்விகள் எழுந்துள்ளது இந்த நிலையில்கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அப்பாவுவிடம் சில கேள்விகள் முன்வைத்தார் ஆனால் அப்பாவு நேரம் இல்லை என சில கருத்துக்களை சொன்னார். அதற்கு வானதி அளித்த பதில் அவை முழுவதும் கை தட்டை பெற்றது. மேலும் வானதி கேட்ட இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சபாநாயகர் அப்பாவு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அவர் பேசியது : தமிழகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வானதி சீனிவாசன், ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளைக் களைய விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எனவும், மத்திய அரசின் சட்டம் என்றும் தெரிவித்தார்.பெண்கள் அதிகளவில் வேலை செய்யும் மாநிலமான தமிழகத்தில் பணிபுரியும் பெண்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதாக அவர் கூறினார்.எனவே, பணிபுரியும் இடங்கள் மட்டுமல்லாது, பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு சீரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.மேலேயும் வேலை வாய்ப்பு குறித்தும் வானதி கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையேகுறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது குறுக்கீடு இன்றி மக்கள் பிரச்னைகளை பேச அனுமதிக்க வேண்டும்-வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார் குறுக்கீடு தேவைப்படாத வகையில் பேசினால் பத்துநிமிடங்கள் பேசலாம் - சபாநாயகர் அப்பாவுஅப்படி என்றால் புகழ்ந்து தான் பேச வேண்டும்,மக்கள் பிரச்னைகளை பேச முடியாதுவானதி சீனிவாசன் பதிலடி தந்தார் இது அவை முழுவதும் கைதட்டுகளை பெற்றது. ஏற்கனவே எதிர்கட்சிகள் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது. எதிர்கட்சிகள் பேசக்கூடாது என்றால் எதற்கு இந்த சட்டமன்ற கூட்டதொடர் மேலும் முதல்வர் துணை முதல்வர் புகழ் பாடுவதற்காகவா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.