Tamilnadu

தமிழகத்த்தை மார்க் செய்து களமிறங்கிய அமிட்ஷா ! எது நடக்க கூடாதோ அது நடந்தது! உள்ளே போகும் அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! மொத்தமாக மாறிய தமிழகம்..

amitsha
amitsha

தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் தமிழகத்தை குறிவைத்து பேசியது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் அவர் அளித்த பேட்டியில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த முறை கண்டிப்பாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்க களத்தில் இறங்கிவிட்டார் இதனால் தான் ஆளும் தரப்பு மிகவும் அதிர்ச்சியில் உள்ளதாம். தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அமித்ஷா பேசியது : 


வக்ப் சட்டம் தங்களுக்கு அநீதி இழைப்பதாக இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை. இஸ்லாமிய பெண்களுக்கு வக்ப் சட்டத்தால் வாரியத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சன்னி, முகமதிய உள்ளிட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு தற்போது வரை வக்ப் குழுவில் இடம் இருந்ததில்லை. புதிய வக்ப் சட்டத்தால் ஏக்கர்கள் கணக்கான நிலங்கள் பாதுகாக்கப்படுகிறது. வக்ப் மசோதா மீது பார்லிமென்டில் பிரியங்கா ஓட்டளிக்கவில்லை. இவ்வளவு கூறுபவர்கள் பார்லிமென்டில் செயலாற்ற மறுக்கிறார்கள். மசோதா மீதான விவாதத்தில் 50 சதவீதம் நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் அதில் ராகுல் பேசவில்லை. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடக்கிறது.

தமிழகத்தில் செய்துள்ள ஊழலை மறைக்க மறுசீரமைப்பு குறித்து பேசி வருகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களில் pro rata அடிப்படையிலான தொகுதிகள் குறையாது. 'இண்டி' கூட்டணி உள்ள மற்ற மாநிலங்களில் எந்த பிரச்னையும் எழவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தற்பொழுது வரை கொண்டு வரப்படவில்லை. வாக்கு வங்கிக்காக தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.ஸ்டாலின் அரசு செய்துள்ள ஊழலை மறைப்பதற்கான தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடகம் நடத்துகிறது. 2026ல் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி வெல்லும். பீஹார் தேர்தலிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுவோம்

இந்தியாவினுடைய மொழிகளுக்காக தான் நான் பேசுகிறேன். யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் தமிழ், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளை கொண்டு வந்தது பா.ஜ., அரசு தான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டது. தி.மு.க.,வில் ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது.


மத்திய அரசு ஹிந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. அனைத்து மொழிகளையும் மத்திய அரசு ஒன்றாக தான் பார்க்கிறது. சி.ஏ.பி.எப்., தேர்வுகள் தற்போது 13 மொழிகளில் நடை பெறுகிறது. மார்ச் 31ம் தேதி 2026ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவரை இதுவரை முடிவு செய்யவில்லை இவ்வாறு அமித்ஷா கூறினார். மேலும் அமித்ஷா அரசு சாரா நிகழ்வுகளில் அதாவது கட்சி கூட்டங்களில் மட்டும் பங்கெடுப்பார்  நாளை மாலை வரை விவாதத்தில் ஈடுபடுவார் ஒரு இரவும் ஒரு பகலும் அவர் விவாதிக்க இருப்பதால் எதோ முக்கிய அறிவிப்புக்கள் கட்சி சார்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது கட்சியின் முக்கிய முடிவுகள் எட்டபடலாம் என நம்பபடுகின்றதுஎன்ன முடிவு எடுக்கபட்டது என அமித்ஷாவின் அறிவிப்போ இல்லை அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை அமைதி காப்பது நல்லது என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் அமித் ஷா  சென்ற தேர்தல்களில் தமிழகத்தின் மீது அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை ஆனால் இந்த முறை களமிறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளார் இதற்கு காரணம் ஆளும் தரப்பு ஊழல் தான் இதில் பல அமைச்சர்கள் உள்ளே செல்வது உறுதியாகி உள்ளது.