24 special

கார் துபாய் அரசு கொடுத்தது என சொன்னது அனைத்தும் போலி...! அம்பல படுத்தப்பட்ட தமிழக ஊடகங்கள்!!

Mk stallin
Mk stallin

தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பல்வேறு குழப்பங்களை தமிழகத்தில் உண்டாக்கியுள்ளது குறிப்பாக அரசு முறை பயணம் என கூறி  குடும்பத்துடன் முதல்வர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் பறந்தது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பெற்றுள்ளது.


இது ஒருபுறம் என்றால் தமிழக ஊடகங்கள் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை பெரிது படுத்தி பிம்பத்தை உண்டாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் துபாய் அரசாங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு BMW கார் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது ஆனால் அது குறித்து தற்போது மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினை துபாய் அரசே BMW Car னை அனுப்பி வரவேற்றதாக ஒரு செய்தியை எல்லா ஊடகங்களும் சொல்கிறது. ஆனால், அந்த 5 இலக்க எண் துபாய் அரசினுடையது இல்லை.ஸ்டாலினை வரவேற்ற,'36147 - private L' என்ற எண்ணைக் கொண்ட BMW வாகனம் துபாய் அரசினுடையது இல்லை என்பதைத் தாண்டி,துபாய் போக்குவரத்து காவல் நிலையத்தில் அந்த வானகத்தின் மீது 38625 திராம் அதாவது, இந்திய பணத்திற்கு ₹8,02,191.04 ரூபாய் அபராதம் நிலுவையில் உள்ளது.

இது துபாய் அரசின் வாகனம் இல்லை, அரசினால் அபராதம் போடப்பட்டு அதை கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கும் தனியார் வாகனம்.அதற்கான தரவுகளை கீழே கொடுத்துள்ளேன் என வினோத் என்பவர் தகவலை முழுவதும் ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார் மேலும் அவரை நமது TNNEWS24 குழுவும் தொடர்புகொண்டு உறுதி படுத்தியது.

எந்த ஒரு உண்மையும் ஆராயாமல் முழுக்க முழுக்க தமிழக ஊடகங்கள் போலி செய்தியை பரப்பியத்தோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு முதல் நடந்து வரும் வர்த்தக கண்காட்சியை ஏதோ தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது போன்று போலி செய்தியை தமிழக ஊடகங்கள் பரப்புவதும் அதற்கு சில யூடுப் சேனல்கள் ஒத்து ஊதுவதும் தெரியவந்துள்ளது.

images -








Source

https://m.facebook.com/story.php?story_fbid=157375753404711&id=100073968600199