24 special

கோவை முதல் சென்னை வரை அரவிந்தின் மாபியா வேலை முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் அம்பலமாகும் ரகசியம்

VIJAY,TAMILNADU
VIJAY,TAMILNADU

போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், கோவை மற்றும் சென்னையில் போதைப்பொருள் தொடர்பாக அரவிந்த் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கேஷ்பே என்ற போலி கிரிப்டோகரன்சி மூலம் நாடு முழுவதும் முதலீட்டாளர்களிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படும் அரவிந்தை, கடந்த ஆண்டு புதுச்சேரி காவல்துறை பல மாநிலங்களில் தேடுதல் நடத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், மீண்டும் கிரிப்டோகரன்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. 


இதனிடையே, கோவை மற்றும் சென்னையில் உள்ள பார், பப் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அரவிந்த் சுற்றி வருவதாகவும், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும், அவற்றை மற்றவர்களுக்கும் விற்பனை செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களை குறிவைத்து போதைப்பொருளுக்கு அடிமையாக்குதல், பிளாக்மெயில் செய்தல் உள்ளிட்ட கடுமையான புகார்களும் கூறப்படுகின்றன. அதேபோல், கிரிக்கெட் சூதாட்டத்திலும் அரவிந்த் ஈடுபட்டு வருவதாகவும், கோவையில் பல்வேறு இடங்களில் இதனை தொழில்போல் நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தனக்கு ஆளும் கட்சி மற்றும் உள்ளூர் முக்கிய நபர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறி வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. அரவிந்துக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொண்டு, குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மெத்தபெட்டமைன் போன்ற மிகவும் விலை உயர்ந்த, கிடைக்க அரிதான போதைப்பொருளை பயன்படுத்தும் இதுபோன்ற நபரை சுதந்திரமாக வெளியே சுற்ற அனுமதிப்பது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவரை விசாரித்தால் கோவை, சென்னை பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் எவ்வாறு வருகின்றன, கிரிப்டோ மோசடி பணம் எங்கு சென்றது, சூதாட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, பெண்கள் அமைப்பு சார்பிலும் அரவிந்துக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.