24 special

முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! உத்தர்காண்டில் விபரீதம்..!

uttarakhand ex-minister
uttarakhand ex-minister

உத்தரகாண்ட் : சொந்த மருமகளே தனது பேத்தியை தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் கொடுத்ததில் மன உளைச்சல் அதிகமான முன்னாள் அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார். அதுவும் காவல்துறையினர் கண்முன்னேயே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.


உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சராக 2002ல் இருந்தவர் ராஜேந்திர பககுணா. வயது 59. இவர் ஹல்த்வனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் மற்றும் அவரது மகன் மருமகள் மனைவி என பேத்தி என சந்தோசமாக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் அவரது மருமகள் தனது மகளிடம் பககுணா பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என காவல்துறையிடம் புகாரளித்தார்.

அதைத்தொடர்ந்து நைனிடால் காவல்நிலையத்தில் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். சரியாக மூன்றாவதுநாள் பககுணா தனது வீட்டிலிருந்த தொலைபேசி மூலம் 112 அவசர எண்ணிற்கு தொடர்புகொண்டுள்ளார். அதன்பிறகு தனது தற்கொலை திட்டத்தை விவரித்துள்ளார்.


அதிர்ச்சியடைந்த கண்ட்ரோல் அறை காவலர்கள் போலீசாருக்கு தெரிவிக்க அவ்ர்கள் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு விரைந்தனர். அந்த காவலதிகாரிகள் குழுவில் இருந்த நீரஜ் என்பவர் பககுணாவிடம் மைக் மூலம் பேச்சு கொடுத்தார். அதேநேரத்தில் தண்ணீர் தொட்டியில் கைதுப்பாக்கியுடன் பககுணா நின்றுள்ளார்.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தான் இறந்தால் மட்டுமே அதை நிரூபிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது மருமகள் நகையை திருடிவிட்டு நாடகமாடுவதாக கூறிக்கொண்டே தனது நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் பககுணாவின் மகன் தனது தந்தை தற்கொலைக்கு மனைவியே காரணம் என புகாரளித்துள்ளார். இந்த புகாரையும் ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.