இந்தியா : ரஷ்ய உக்ரைன் மோதலை தொடர்ந்து ரஷ்யாவின் மீது ஐரோப்பியா உட்பட சில நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடைகளை விதித்தன. மேலும் கூகிள் பே போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தின. ரஷ்யாவின் மீது தங்களது நீண்டகால ஆத்திரத்தை இந்த சூழலை பயன்படுத்தி தீர்த்துக்கொண்டன. அதோடு நில்லாமல் இந்தியாவையும் பொருளாதார தடை போடச்சொல்லி வற்புறுத்தியிருந்தன.
சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவான முடிவுகள் எடுத்தும் ரஷ்யாவுடனான தங்களது நட்பை பாராட்டி வந்தாலும் மேற்கத்திய பத்திரிக்கைகள் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு எதிராக ஓலமிட்டு வந்தன. ஆனால் ஸ்திரத்தன்மையுடன் விவேகமாக செயல்பட்டு வரும் மோடி அரசு ஆரம்பத்தில் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவதில் ஒரு சுமூகமான முடிவை அறிவிக்க தயங்கியது. இது உலகநாடுகளின் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பா போன்ற பிற நாடுகளின்மீதான பயத்தால் அல்ல.
இந்தியா ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் தனக்கான முத்திரையை பதிக்கவிரும்புவதுடன் நாட்டிற்கு கிடைக்கும் லாபம் என்ன என்பதில் மிக கவனமாக இருந்தது. அதன் பலனாக இரண்டு விஷயங்களை மோடி அரசு சாதித்துக்காட்டியுள்ளது. ரூபாய்-ரூபிள் வர்த்தகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது மற்றும் எரிபொருள் இந்தியா வந்துஸ் சேர்வதற்கான அனைத்து செலவையும் ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்லாமல் ஒரு தோப்பையே இந்தியா அடைந்துள்ளது.
இனிவரும்காலங்களில் மேற்கத்தியநாடுகளின் மாஸ்டர் கார்டு விசா கார்டு போன்றவை தனது சேவையை நிறுத்தினாலும் இந்தியா ரூபிள் வர்த்தகம் மற்றும் வேறு சிலநாடுகளின் கரன்சியில் வணிபத்தை மேற்கொள்ளும். இதோடு இந்தியாவில் UPI,PAYTM, பாரத் பே போன்ற பணப்பரிவர்த்தனை மூலங்களை பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவின் இந்த செயல்பாடுகளை ஐரோப்பிய பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்தன.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சில இந்தியாவின் வழியில் பயணித்து ரஷ்யாவுடன் கைகோர்க்க தொடங்கியுள்ளன. மேலும் ரஷ்யா தன்மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை கவனத்தில் கொண்டு கடந்த 31 மார்ச் 2022ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நட்பற்ற நாடுகள் ரூபிள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்யவேண்டும் என நிபந்தனை விதித்தது.
மேலும் பல்கெரியா போலந்து மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு தனது எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. மேலும் இந்த நட்பற்ற நாடுகளுடன் மேலும் சில நாடுகளை பட்டியலில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனாலும் பிரான்ஸ் ஜெர்மன்,ஹங்கேரி இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ரூபிள் யூரோ வணிக ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்து ஹைட்ரோ கார்பன்களை இறக்குமதி செய்துவருகிறது. ஒருபுறம் தடி விதித்தும் மறுபுறம் இறக்குமதி செய்தும் ஐரோப்பிய ஒன்றியங்கள் இரட்டைவேடம் வேளையில் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நேர்கொண்ட பார்வையுடன் வீரநடை போட்டு வருகிறது.