
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து ஜாமின் கோரிய மனு எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்பார்பது தீர்ப்பை அறிவித்துள்ளார்.
கைது செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் கோரினர் அதுயெல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரியது எல்லாம் தள்ளுபடியில் முடிந்தது. ஒவ்வொரு முறையும் ED அதிகாரிகள் கூறிய வாதம் பதவியில் இருக்கிறார் அதுவும், அவரது தம்பி அசோக் குமார் வெளியில் இருக்கிறார் அதன் காரணமாகவும் வெளியில் விடுவித்தாள் ஆதாரத்தை களைத்து விடுவார் என கூறி ஜமீனை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் 2 வது முறையாக செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தாா். மறுபக்கம் அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். அதிகாரத்தில் இருப்பதன் காரணமாகவே சாட்சி கலைக்கப்படும் என கூறியதால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார் என கூறப்பட்டது. ஜாமின் கோரிய இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, "அமலாக்கத்துறையின் ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் இருக்கின்றன. முன்னாள் அமைச்சருக்கு எதிரான 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
போக்குவரத்து துறையில் வேலை பெற்றுத் தருவதாக மோசடி செய்தார் என செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட 3 வழக்குகள் மட்டுமே உள்ளதாகவும், சுவரொட்டிகள் ஒட்டியது, முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடா்பாகவே மீதமுள்ள 6 வழக்குகள் உள்ளது. வேலை பெற்று தரும் பண மோசடியில் அமலாக்கத் துறை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. நீட காலம் சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போக்குவரத்துக்கு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்த ஆதாரங்கள் உள்ளது. செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும் எம்எல்ஏவாக இருப்பதால் அவர் மூலம் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவே அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக தரப்போ அடுத்ததாக அமைச்சர் பதவியை போல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த் முனைப்பு காட்டி வருவதாக க்சில தகவல் வருகிறது. ஆனால் செந்தில் பாலாஜி எம்எல்ஏ பதவியை விட்டு கொடுப்பதாக தெரியவில்லை. பதவியோடு வெளியில் வந்துவிடலாம் என நினைத்து வருகிறாராம். தினமும் செந்தில்பாலாஜியின் வழக்கை விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கி வெளியே சென்று விடலாம் என எதிர்ப்பார்த்தார் அதன் பிறகு பொங்கலுக்கு வெளியே சென்று விடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாடளுமன்ற தேர்தலுக்கும் சிறையில் தான் இருக்கவேண்டும் என்ற நிலை வந்துள்ளது.