
கலிகாலம் என்று எதைக் கூறுவார்கள் முன்பு நடந்தவற்றிற்கு மாறான நிகழ்வுகள் தற்போது நடக்கிறது இது நடக்கவே நடக்காது என்று கூறிக் கொண்டிருந்தவர்களே ஆச்சரியமடையும் அளவிற்கான செயல்கள் நடைபெறுவதையும் கலிகாலம் என்பார்கள். அதுபோன்ற கலிகாலத்தில் தான் நாம் வாழ்கிறோம் போல.... ஆம் தற்போது நம் காதுகளில் விழும் செய்திகள் அனைத்துமே இதுவரை நடந்திராத திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதாவது முன்பெல்லாம் ஒரு அழகான பொண்ணை ஒரு ஆண் பார்த்து மயங்கி அவளோடு தான் இனி என் வாழ்க்கை அவளோடு தான் எனது மீதி எதிர்காலம் என கனவுகோட்டை கட்டி துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ப்ரொபோசலை முன்வைத்து அந்தப் பெண்ணை சுற்றி சுற்றி வருவார்கள்.
இதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை ஒருவேளை சம்மதம் தெரிவிக்காமல் மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தால் சில இளைஞர்கள் சரி என்று ஏற்றுக் கொண்டு திரும்பிச் செல்வார்கள் ஆனால் சில இளைஞர்கள் அந்த பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவறான முடிவுகளையும் சில செய்யக்கூடாத வேலைகளிலும் ஈடுபடுவார்கள் அதாவது மரணத்தை நோக்கி சிலர் ஓடுவார்கள் அல்லது அந்தப் பெண்ணை மீண்டும் துரதி துரத்தி காதலித்து தனது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையிலான ஒருவகை அழுத்தத்தை கொடுக்க ஆரம்பிப்பார்கள் இந்த அழுத்தம் ஒரு சமயத்தில் வேறு மாதிரியாக மாறி அப்பெண்ணை கடத்தி தன் விருப்பத்தை சம்மதிக்க வைக்கும் அளவிற்கு டார்ச்சர் செய்து சம்மதிக்க வைக்கும் அளவிற்கு சென்று விடும்! அதுமட்டுமின்றி அப்படி குறிப்பிட்டு சில ஆண்கள் கொடுக்கும் டார்ச்சரையும் மீறி அந்த பெண் தனது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அந்த பெண்ணை கொல்லும் அளவிற்கு கூட சில ஆண்கள் சென்றுள்ளனர் இதனை பல செய்திகளில் பார்த்திருப்போம் சினிமாவிலும் பார்த்திருப்போம்.
இவற்றிற்கெல்லாம் ஒரு மாறுபட்ட கதையாக ஒரு பெண் ஆணை தொடர்ச்சியாக துரத்தி காதலித்து டார்ச்சர் செய்யும் வகையிலான காட்சிகள் சினிமாவில் வெளியான திமிரு என்ற படத்தில் பார்த்து வியந்து அந்த நடிகையின் நடிப்பை பாராட்டி இருந்தோம்!! அதுதான் திமிரு படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவருக்கும் ஒரு பிளாஷ்பேக் கதைகள் வருகின்ற வில்லிதான் அந்த வில்லி கேரக்டரை இதுவரை மறக்கவே முடியாது அப்படி ஒரு ஆதிக்கம் நிறைந்த ஒரு ரோலில் நடித்திருப்பார் ஷ்ரேயா ரெட்டி! இப்பொழுது புரியும் நான் ஏன் ஆரம்பத்தில் கலிகாலத்தைப் பற்றி கூறினோம் என்று....ஆமாம் திமிரு படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகளைப் போன்ற உண்மை சம்பவம் தற்பொழுது நடைபெற்றுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் பிரணவ் ஜெமினி என்ற தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் பகுதிநேர ஆங்கரிங் செய்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கானா முழுவதும் இளசுகளின் கிராஸ் ஆகவும் சமூக வலைதளத்தில் பல பிரப்போசல்களையும் பெற்று வந்தவர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனியில் பிரணவ்வின் புகைப்படத்தோடு ஒரு வரன் வந்துள்ளது அதனை பார்த்த தொழிலதிபராக உள்ள திரிஷா என்ற பெண்ணின் பிரணவிற்கு இரவு பகலாக சாட்டிங் செய்துள்ளார்.
பிரணவ் தரப்பிலிருந்து பதில்கள் வரப்பட்டதால் இருவரும் சேட்டிங் மூலமாகவே தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர் ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திரிஷாவிற்கு தெரியவந்துள்ளது தன்னுடன் பேசியது பிரணவ் இல்லை பிரணவ்வின் ஐடியை தவறாக பயன்படுத்தி வரும் வேறொரு நபர் என்று, இதனை அடுத்து அந்த போலி நபரை எச்சரித்து தெறிக்க விட்டு உள்ளார். மேலும் உண்மையான பிரணவ்வின் விவரங்கள் மற்றும் தகவல்களை கண்டறிந்து ஆங்கர் பிரணவ்வை நேரில் சந்தித்து தனக்கு நடந்தவற்றை எடுத்துக் கூறி என்னிடம் பேசியவர் தான் தவறான ஆள் ஆனால் நான் காதலித்தது உண்மை உங்களைத்தான் நான் காதலிக்கிறேன் என்று தொடர்ந்து திருமண டார்ச்சர் கொடுத்து வர ஆரம்பித்தார் இதனை பலமுறை மறுத்து வந்த பிரணவ்வை ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று யோசித்த த்ரிஷா அடியாட்கள் மூலம் பிரணவ்வை கடத்தி வரச் சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார் திரிஷா! இப்படி பத்து நாட்களாக வெளியே வர முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரணவ் ஒரு வழியாக வெளியே வந்து காவல்துறையிடம் புகார் அளித்தார் இதை அடுத்து காவல்துறை திரிஷாவை கைது செய்துள்ளனர்!!! எனவே நாம் கூறியது போன்று இது கலிகாலம் தானே!!