கர்நாடகா : பெண்ணியம் பேசி சமூகவலைத்தளங்களில் பிரபலமாவது ஒரு சிலரின் மனநோயாக இருந்துவரும் வேளையில் திரௌபதி முர்மு மற்றும் அனன்யா ஷர்மா போன்ற பெண்களின் சாதனைகள் ஊடகங்கள் மறைத்துவிடுவது மிக வேதனையான ஒன்று. பகட்டு பேசுபவர் பின்னால் திரியும் ஊடகங்களும் வெகுசிலரும் சாதனைப்பெண்களை கண்டுகொள்வதில்லை.
ஆனாலும் சாதனை பெண்கள் தங்களது துறையில் தொடர்ந்து தனிமுத்திரை பதித்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய விமானப்படையை சேர்ந்த அப்பா மகள் ஜோடி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்திய விமானப்படையின் கமடோர் சஞ்சய் ஷர்மா மற்றும் பிளையிங் ஆபிசர் அனன்யா ஷர்மா ஆகிய தந்தை மகள் ஜோடி கர்நாடகாவை கலக்கியுள்ளது.
தந்தை மகள் குழு கடந்த மே 30 அன்று கர்நாடகா மாநிலம் பிதாரில் அமைந்துள்ள IAF விமானப்படைத்தளத்தில் ஹாக்-132 எனும் நவீனத்தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி போர்விமானத்தை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது. இந்த குழு தந்தை மகள் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் அனன்யா இந்த பிதார் தளத்தில் பயிற்சி விமானியாக உள்ளார்.
அதேபோல அனன்யாவின் தந்தை சஞ்சய் சர்மா மிக் 21 விமானப்படைக்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் பல முன்வரிசை போர்விமானங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளதோடு போர்நடவடிக்கைகளில் அதிக நிபுணத்துவம் பெற்றவர் என அறியப்படுகிறார். தந்த மகளின் போர்விமான சாகசம் தற்போது சமூகவலைத்தளங்களில் அனைவரது இதயத்தையும் கவர்ந்துள்ளது.