24 special

எ வ வேலுவிற்கு வந்த பெரும் ஆப்பு இனி அம்போ தான்...!

ev velu ,dmk
ev velu ,dmk

பலமுறை படித்து படித்து திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் பொறுமையாக இருங்கள் மத்திய அரசு விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கு முன்னர் முதலில் நம் பக்கம் பல வில்லங்கம் இருக்கு அதை சரி செய்த பின் மத்திய அரசுடன் மோதலாம் என முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் வாரிசுகளிடம் மூத்த தலைவர் பல முறை கூறினார்கள்.ஆனால் அவை எவற்றையும் கண்டு கொள்ளாமல் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரை புது புது வழக்குகளில் கைது செய்து ஆட்டம் போட்டு வந்தது திமுக, மேலும் கைது செய்யபட்ட பாஜக நிர்வாகி அமர் உள்ளிட்ட பலரை மேலும் புதிய வழக்குகளில் கைது செய்து  குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் முயற்சி எடுத்து வந்தது.


மத்திய பாஜக அனுப்பிய குழு கவர்னரை சந்தித்தும் திமுக அரசு தன்னை மாற்றி கொள்ளவில்லை இந்த நிலையில் தான் தற்போது திமுகவின் இரண்டாம் கருவூலம் என அழைக்கப்படும் எ வ வேலு தொடர்புடைய இடங்களில் சுற்றி வளைத்து இருக்கிறது வருமான வரித்துறை.பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று  காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, அருணை கிரானைட் என அமைச்சர்.எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலு வீடுகள், அலுவலகம் உட்பட 40 இடங்களில் சுமார் 160 அதிகாரிகள் காலை 6.00 முதல் ரெய்டு நடத்தி  வருகின்றனர்.சென்னையில் கீழ்பாக்கம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடந்து வருகிறதுதுணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.கடைசியாக ஜெகத் ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் மூட்டை மூட்டையாக பண குவியல் கைப்பற்ற பட்ட நிலையில் தற்போது அடுத்த அதிரடியாக எ வ வேலு வீட்டில் சோதனை தொடங்கி இருக்கிறது.

ஒரு அமைச்சர் கூட யோக்கியம் இல்லையா? செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார் ஒவ்வொரு மந்திரி எம் பி வீட்டில் ரெயிடு நடக்கிறது பணமும் கைப்பற்ற படுகிறது ஆனால் திமுக அரசு விடியல் விடியல் என கோஷம் போடுகிறது இதுதான் மக்கள் ஆட்சியா என பொதுமக்கள் புலம்ப தொடங்கி இருப்பது குறிப்பிட தக்கது.அடுத்த வீடியோவில் பிரதமரே சொல்லிட்டாரு எவ வேலு விற்கு வந்த பெரும் ஆப்பு என்ன என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம் மறக்காமல் நமது TNNEWS24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.