24 special

ஐந்து மாநில தேர்தல்.... உஷாரான திமுக..... கத இனிமேல்தான் ஆரம்பம்.....

DMKstalin,Thelungana Election
DMKstalin,Thelungana Election

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதம் விறுவிறுப்பாக நடந்துள்ளன. நவம்பர் 7ஆம் தேதி மிசோரமில் முதல் தேர்தலும், அடுத்தபடியாக நவம்பர் 14ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மாநில தேர்தலும், அடுத்தபடியாக நவம்பர் 23ஆம் தேதி ராஜஸ்தானிலும், நவம்பர் 7ம் மற்றும் நவம்பர் 30ம் தேதி தெலுங்கானாவிடம் நேற்று தேர்தல் நடைபெற்றது. 


இப்படி மற்ற நான்கு தேர்தல்களும் முன்னாடியே நடைபெற்ற நிலையில் தெலுங்கானாவில் நேற்று முடிவடைந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மற்ற மாநிலங்களையும் சேர்த்து வெளியாகி உள்ளன. அந்த கருத்துக்கணிப்பின்படி  மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்கவைக்கும் எனவும், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் அங்கேயும் பாஜக வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் அதிரடியாக தெரிவிக்கின்றன. 

மேலும் தெலுங்கானாவில் இரு கட்சிகளுக்கும் இழுபறியாக இருக்கும் எனவும் மிசோரத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் அதுபோலவே சற்று இழுபறியாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்துக்கணிப்புகள் முடிவு காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ் தற்பொழுது ராஜஸ்தானில் ஆட்சியை இழக்க உள்ளது அதற்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என தெரிகிறது. 

இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து தான் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர் மற்றும் இன்ன பிற விஷயங்கள் எல்லாம் முடிவாகும் என அரசியல் நிபுணர்களால் ஏற்கனவே கணிப்புகள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் வரும் தேர்தல் முடிவுகள் அன்று பெரும்பான்மையாக பாஜக ஐந்து மாநிலத்தில் குறைந்தது மூன்றை கைப்பற்றும்  நிலை ஏற்பட்டுள்ளதை வைத்து அரசியல் கருத்து நிலவரம் அப்படியே மாறும் என கூறப்படுகிறது. 

குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் 15 சீட்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரசுக்கு 5 மாநில தேர்தலில் ஏற்பட்ட கருத்துக்கணிப்புகள் பின்னடைவு அதில் எதிரொலிக்கும் என தெரிகிறது. ஏற்கனவே திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சு வார்த்தை பெரிய அளவில் திருப்தியாக இல்லை திமுக தலைமையிடம் காங்கிரஸ் 15 இடம் கேட்க, திமுகவோ ஐந்து இடங்கள்தான் கொடுப்பேன் என்கிறது. இது மட்டுமல்லாமல் உதயநிதியின் சனாதன விவகாரம் வேறு காங்கிரசுக்கு பிடிக்கவில்லை இப்படி பிடிக்காத கூட்டணியாக நீண்ட நாட்களாக இருந்து வருவது சிரமம் ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கணித்த நிலையில் தற்போது இந்த ஐந்து மாநில தேர்தலை வைத்து திமுக தற்பொழுது அதிமுக பாணியை கையில் எடுக்கலாமா என என திமுக யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே ஐந்து மாநில கருத்துக்களை வெளியான நிலையில் அதிமுகவைப் போல் கூட்டணியில் இருந்து விலகி தனியே தேர்தலில் நிற்கலாமா எனவும் யோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் அல்லாமல் அறிவாலயத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறி வைத்து பாஜக பெரும்பான்மை இடங்களை பிடிக்காது, அதனால் நமக்கும் தமிழகத்தில் சவால்கள் இருக்காது என பேசப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் வரும் கள அறிக்கைகளும், ஐந்து மாநில தேர்தலில் வெளியான கருத்துக்கணிப்புகளும் பாஜகவை மீண்டும் 2024 இல் மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் நமக்கு அடுத்த மூன்று வருடம் மிகவும் சிரமம் தான் எனவும் அறிவாலய தரப்பு புலம்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.