Cinema

நன்றி விசுவாசம் தெரியாதவர் விஜய்?...இதுயெல்லாம் நியாமா தளபதி? ஒரே போடாக போடும் சினிமா வட்டாரம்!

Vijayakanth, Vijay
Vijayakanth, Vijay

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார். தற்போது உடல்நிலை தொய்வு காரணமாக  மியாட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அவருக்கு வென்டிலேட்டரை எடுத்துவிட்டால் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில், கேப்டன் நலமுடன் உள்ளார் விரைவில் உங்களை சந்திப்பார் என தொண்டார்களுக்கும், ரசிங்கர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து வந்தார். இந்த நேரத்தில் நடிகர் விஜய் குறித்து விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. 1991ம் ஆண்டு விஜயின் தந்தை நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் ஆனால் அது அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. விஜய்க்கு நடிப்பு வரவில்லை, டான்ஸ் வரவில்லை என விமர்சனம் தொடங்கியது. அப்போது முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு வாய்ப்பு  ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகனுக்கு ஒரு நல்ல திருப்பு முனையை கொடுக்கமுடியாது நிலைமை ஏற்பட்டது.

அப்பொழுது எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்த் தொடர்பு கொண்டு பேசுவதற்கு அழைத்துள்ளார். உடனே விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நேராக விஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் எனக் கேட்ட பொழுது தம்பியை வைத்து ஒரு படம் செய்கிறேன் நீங்கள் ஒரு கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்கும் அதுதான் செந்தூரப்பாண்டி விஜயகாந்த் அண்ணன் கதாபாத்திரம் உடனே எப்பொழுது சூட்டிங் எப்பொழுது சொல்லுங்கள் வருகிறேன் என்றாராம். சொன்னபடியே ஷூட்டிங் வந்தது மட்டுமில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு விஜயகாந்த் சென்றாராம். விஜய்க்கு தோல்வியில் இருந்து மீண்டு வர கைகொடுத்தவர் விஜயகாந்த் இப்பொழுது விஜயகாந்த்தை விஜய் குடும்பம்  கண்டுகொள்ளவில்லை என விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

தற்போது விஜயின் வளர்ச்சி அடுத்த சூப்பர் ஸ்டார் என்னும் அளவிற்கு வளர்ந்து விட்டார். ஈர்த்து படம் எல்லாம் 500 கோடி கிளப்பில் சாதாரணமாக இணைந்து விடும் என்பதில் மாற்றமில்லை. விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வரும் விஜய் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என பிசியாக வருகிறார். இதற்கிடையில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது விஜய் மீது, அதாவது அரசியல் தலைவர் தோல் திருமாவளவன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜயகாந்த் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அவரை ஏன் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பேசவில்லை என சினிமா வட்டாரங்கள் விஜய் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

விஜயகாந்துடன் பணிபுரிந்த நடிகர் பார்த்திபன், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் அவர் நலமுடன் வரவேண்டும் என கூறி வரும் நிலையில், விஜயின் இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்த நபரை என் கண்டு கொள்ளவில்லை..உங்களது நன்றி விசுவாசம் இதுதானா...அரசியல் தலைவர் பிறந்தநாள் என்றால் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், விஜயகாந்துக்கு பிறந்தநாள் வந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. இப்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் அவர் குறித்து எந்த வித பதிவோ அல்லது அவரது குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது தான் உங்களது இயல்பு தண்மையா என் கேள்விகள் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.