24 special

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ஆளுநர்.!

Aravind kejarwal , Kiran Bedi
Aravind kejarwal , Kiran Bedi

புதுதில்லி : மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக்கொள்பவர் முன்னாள் காவல் அதிகாரியும் ஆளுநருமான கிரண்பேடி. இவர் சமீபத்தில் அவரது ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஹாலிவுட் திரைப்படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்து நேஷனல் ஜியோக்ராபிக் சேனல் ஒரு மில்லியன் டாலர் பரிசளித்த வீடியோ என கூறியிருந்தார். அது நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியிருந்தது.


இந்நிலையில் ஜூன் 13 அன்று முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தனது அச்சமற்ற ஆளுமை எனும் நூலை வெளியிட்டார். அந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கிரண்பேடி சீக்கிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியிருப்பதாக வலைத்தளங்களில் கணடனக்குரல்கள் எழ ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நேற்று கிரண்பேடி மன்னிப்பு கோரினார்.

அவர் பேசியதாவது " 12 மணி என்பதன் வரலாறு தெரியுமா. முகலாயர்கள் இந்தியாவை சூறையாடி பெண்களை கடத்தினர். அப்போது சீக்கியர்கள் முகலாயர்களுடன் போரிட்டு தங்கள் சகோதரிகளையும் மகள்களையும் பாதுகாத்தனர். 12 மணி என்பது முகலாயர்களை தாக்கும் நேரம்" என கூறியிருந்தார். கிரண்பேடியின் இந்த நகைச்சுவை கருத்து சர்ச்சையாக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று கிரண்பேடி அவர்கள் "எனது சமூகத்தின் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.நான் பாபா நானக் தேவ் ஜியின் தீவிர பக்தை.நான் கூறியதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் சேவை மற்றும் அன்பை நம்புகிறேன்" என தனது ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். 

கிரண்பேடியின் நகைச்சுவை கருத்துக்களை அரசியல் கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். ஆம் ஆதமின் தலைமை செய்திதொடர்பாளரான மல்விந்தர் சிங் கிரண்பேடியின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்ததோடு சீக்கியர்களின் மத உணர்வுகளை தொடர்ந்து கிரண்பேடி புண்படுத்திவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல பஞ்சாப் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் " ஒரு சமூகத்தை கேலிசெய்வது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. நீங்கள் பஞ்சாப் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்" என கூறியுள்ளார்.