24 special

ஐநாவுக்கே வழிகாட்டும் மேக் இன் இந்தியா..!

Modi, jaishankar
Modi, jaishankar

புதுதில்லி : ஜெனிவாவில் இயங்கிவரும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் (UNOG) பயன்படுத்தப்போகும் வே பைண்டிங் அப்ளிகேஷன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான நேவிகேஷனல் அப்ளிகேஷன் என மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் பெருமையாக கூறியுள்ளார். மேலும் அவர் பாராட்டுகையில்,


" இந்த நேவிகேஷனல் செயலி இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களையும் நாட்டின் மென்பொருள் சக்தியையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது" என குறிப்பிட்டார். பாலைஸ் டெஸ் நேஷனல் யூஎன்ஓஜியில் பயன்படுத்தப்பட போகின்ற வே பைண்டிங் அப்ளிகேஷன் குறித்த ஒப்பந்தத்தில் இந்திய அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் கையெழுத்திட இருக்கிறது,

இந்த கெய்யெழுத்திடும் ஒப்பந்த முன்மொழிவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக கட்டிடங்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்ட  சிரமங்கள் பல்வேறு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்க வரும் பிரதிநிதிகள் சிவில் உறுப்பினர்கள்,

மற்றும் பொதுமக்கள் பங்கேற்பதையும் கவனத்தில் கொண்டு அலுவலகங்களுக்கு வழிகாட்ட ஒரு பயன்பாட்டு செயலி தேவைப்பட்டது. அதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஒரு செயலியை பயன்படுத்த  முடிவெடுத்திருந்தது. இதற்கான தேடலில் இந்தியாவின்  வே பைண்ட் அப்ளிகேஷன் செயலி ஐக்கிய நாடுகள் சபையால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

கூகுள் மேப். சீனா மற்றும் ரஷ்யாவின் செயலிகள் இருக்க இந்தியாவின் செயலியை தேர்ந்தெடுத்திருப்பது பற்றி பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் " இது ஒரு முக்கியமான தருணம். இந்தியாவின் தொழிநுட்பத்திறன் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுகிறது, இது நமது அசாத்தியமான திறமையால் மட்டுமே கைகூடியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.