24 special

மாபியாக்கள் அச்சுறுத்தல்..! அவமானப்பட்ட முதல்வர்..?

Aasam
Aasam


அஸ்ஸாம் : மாபியாக்களின் தொடர் அச்சுறுத்தலை தொடர்ந்து அசாம் மாநிலம் திப்ருகரில் இளம் தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். திப்ருகரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஆறுதல் கூறினார்.


அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா நேற்று திப்ருகாரில் மாபியாக்களின் அச்சறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட கும்பத்தினரை சந்தித்தார். அப்போது " உள்ளூர் நிர்வாகம் தோற்றுப்போய்விட்டது. இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். காவல்துறை இங்கு இருந்து கூட மாபியா இங்கு வரத்துணிந்ததை எண்ணி அவமானப்படுகிறேன்.

நான் உண்மையில் இதற்காக வெட்கப்படுகிறேன். நான் முதலமைச்சராக இருக்கும்போது இதுபோன்ற சம்பவம் நடந்ததற்கு வெட்கப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்தியுள்ளது. அவரின் பெற்றோர் மற்றும் மாநில மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இது திப்ரூகர் மாவட்ட நிர்வாகத்தின் பெரிய தோல்வி" என வேதனையுடன் முதல்வர் குறிப்பிட்டார்.

திப்ரூகர் நகரை சேர்ந்த இளம் தொழிலதிபரான வினீத் பகாரியா (32) மாபியா கும்பல்களின் தொடர் மிரட்டலால் கடந்த வியாழனன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் மரணிக்குமுன்னர் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கடையின் வாடகைதாரர் உட்பட மூன்றுபேர் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். 

மேலும் பகாரியா குடும்பத்தினர் ஏற்கனவே இதுகுறித்து திப்ருகார் காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்க காலதாமதமானது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். "திப்ரூகர் போன்ற இடங்களில் உள்ள அதிகாரிகளால் எண்கள் வேண்டுகோளை புரிந்துகொண்ட செயல்படமுடியவில்லை என்றால் கிராமப்புறங்களில் பணியமர்த்தப்பட்டவர்கள் எப்படி எங்களது வார்த்தைகளை கேட்பார்கள்" என முதல்வர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.