
சமீபகாலமாக இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவு முன்பு இருந்த அளவுக்கு சுமூகமாக இல்லை. வங்கதேசத்தின் நடவடிக்கைகளே இதற்கு காரணம். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது. வங்கதேசத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்நாட்டிலிருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய இந்தியா கட்டுபாடு விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்கு ரூ,1,000 கோடிக்கு மேல் கூடுதல் வணிகம் கிடைக்கும். மேலும் இறக்குமதி கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் வங்கதேசத்துக்கு இழப்பு அதிகமாகி உள்ளது. இதற்கு முழுக்காரணம் பாக் போல வங்கதேசமும் இஸ்லாம் நாடாக உலகிற்கு காட்ட நினைப்பதன் விளைவு தான்.
கொரோனா காலத்தில் நம் நாட்டின் துறைமுகம், விமான நிலையங்களை பயன்படுத்தி வங்கதேசம் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரியது. அப்போது வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். நம் நாடும் அனுமதி வழங்கியது. ஆனால் முகமது யூனுஸ் நம் நாட்டை எதிர்ப்பதால் இந்த அனுமதி என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதனை தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருக்கிறார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி நம் நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 7 மாநிலங்களுக்கு எதிராகவும், அங்கு சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறது.
சரி இது இருக்கட்டும். இப்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று பிரான்ஸ். அந்த நாட்டின் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இவருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ், இமானுவேல் மேக்ரானை சந்திக்க முடிவு செய்தார்.
அதாவது அடுத்த மாதம் மூன்றாவது ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு (3rd United Nations Ocean Conference) நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஜூன் மாதம் 9ம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முகமது யூனுஸ் பங்கேற்க தயாராகி இருந்தார். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச முகமது யூனுஸ் அனுமதி கோரியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின்போது பிரான்ஸ் - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை விரிவுப்படுத்துவது பற்றி விவாதிக்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து முகமது யூனுஸ் அந்த மாநாட்டுக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார். இது வங்கதேசத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதாவது வங்கதேசம் சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளை கடந்த பிற நாடுகளுடன் உறவை வளர்க்க நினைக்கிறது. அதன்படி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால் அது வங்கதேசத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.அதாவது இந்த மாநாட்டின்போது ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தனித்தனியே இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு நடத்த உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.