
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 2538 பணி நியமனங்களில், ₹888 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், இதற்கு ஒரு தனித்துவமான ’10 ரூபாய் நோட்டு’ பாணி பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பணி நியமனத்திற்கும் ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த ஊழல் தொகை சுமார் ₹888 கோடி இருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை (ED) களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் ஐந்து அமைச்சர்களை குறிவைத்து துறை விசாரணை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் முக்கியமாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தொடர்பான பணி நியமன முறைகேடு விவகாரம் குறித்த கடிதம், அமலாக்கத்துறையிலிருந்து டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.“தேர்தல் நேரத்தில் திமுக அதிகப்படியான செலவு செய்ய இப்போதே தயாராகிவிட்ட்டதாம். மேலும் “தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஆளும் தரப்பினர் வசூல் வேட்டையில் தீவிரமாக இறங்கி இருப்பதாக அமலக்கத்துறைக்கு தொடர்ச்சியாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கிரஷர், குவாரி உரிமையாளர்களிடம் இருந்து பெருமளவில் வசூல் நடைபெறுகிறது என்று திமுகவிலேயே உள்ள சிலர அமலாக்கத்துறைக்கு தகவல்அளித்துள்ளார்கள் . இதையெல்லாம் அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறதாம் . உறுதியான ஆதாரங்கள் கைக்கு வந்தவுடன், அங்கும் நிச்சயம் அமலாக்கத்துறையின் ‘ஆட்டம்’ ஆரம்பமாகும்,” என தெரிவித்தனர்.
அதன்படியே முதல்கட்டமாக, நகராட்சி நிர்வாகத் துறையின் பணி நியமன முறைகேடு குறித்த விவகாரம் டிஜிபிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து விஜிலன்ஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் நாங்களும் நேரடியாக விசாரணைக்கு உள்ளே இறங்க உள்ளது அமலாக்கத்துறை. . எப்.ஐ.ஆர் வராவிட்டாலும் நீதிமன்றம் மூலமாக சில நடவடிக்கைகள் தொடங்கப்படும். அப்போ நிச்சயமாக களமிறங்கும் என்றனர்.
“திமுகவை உண்மை முகத்தை காட்டும் வேளைகளில் இறங்கியுள்ளது. இந்த முயற்சியின் முதல் கட்டமே இது. அடுத்ததாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் மீது கண்காணிப்பு நடக்கிறது” அமலக்கத்துறை கூறியுள்ளது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகள், வரவிருக்கும் தேர்தல் சூழலில் அரசியல் வெடிகுண்டாக மாறியுள்ளன.இந்தநிலையில் தான் சென்னையில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்தியுள்ளது .சென்னை கோடம்பாக்கத்தில் விக் ஏற்றுமதி தொழில் நடத்தி வரும் வெங்கடேசன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து கோடம்பாக்கம், நெற்குன்றம் பகுதிகளில் உள்ள வெங்கடேசன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாகத்துறையினர் நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சோதனையின் முடிவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், தொழிலதிபர் வெங்கடேசன் யாருடைய பினாமி, தலைமுடி ஏற்றுமதியில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது எப்படி என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
