24 special

திமுக டூ தவெக தொடரும் விளம்பர அரசியல் விஜயின் மெகா தோல்வி 15,000 கோடி மெகா திட்டத்தை தட்டித் தூக்கிய சந்திரபாபு நாயுடு

MKSTALIN,VIJAY
MKSTALIN,VIJAY

திமுக ஆட்சியும், அதைத் தொடர்ந்து வந்த விஜய் ஆட்சியும் தமிழ்நாட்டின் பொருளாதார வாய்ப்புகளை தொடர்ந்து அண்டை மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பரிதாபகரமான நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று உரத்த விளம்பரம் செய்த திமுக ஆட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோனதோடு, முதலீடுகளும் ஆந்திராவுக்கு ஓடின. இப்போது விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே முதல் பெரிய தோல்வியைப் பதிவு செய்துள்ளது.


இந்தியாவின் 5-ம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டமான AMCA-வின் சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையம், சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மெகா பாதுகாப்புத் திட்டம் ஓசூருக்கு அருகில் அமையவிருந்தது தமிழ்நாட்டின் கையிலிருந்து நழுவி, ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்திக்குச் சென்றுவிட்டது. 

விஜய் ஆட்சி அமைந்த பிறகு  துண்டு இல்லாத சேரில் அமர்வது , மதிய உணவை வீட்டிலிருந்து கொண்டு கொண்டு வந்து சாப்பிட்டார் , பெட்ரோல் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அமைச்சர்கள் தங்கள் பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்துக் கொண்ட நிலையில் தமிழக முதல்வர் 17 கிலோமீட்டர் தூரத்துக்கு தனி லேன் போட்டு பயணம் செய்வது, பழைய திட்டங்களுக்கு புதிய ஸ்டிக்கர் ஒட்டியது, சபாநாயகர் சட்டசபையில் பைபிள் வாசித்தது  என  விளம்பரங்களுக்கு மத்தியில், ராணுவத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த மிக முக்கியமான 15,000 கோடி திட்டம் தமிழகத்தை விட்டுப் போனது. "புலி வருது" என்ற விளம்பர முழக்கத்தோடு தொடங்கிய ஒவ்வொரு முதலீட்டுப் பேச்சும் இறுதியில் அண்டை மாநில எல்லையைக் கடந்து செல்வது தொடர் கதையாகிவிட்டது.

திமுக ஆட்சியில் தொடங்கிய இந்த இழப்பு இப்போது விஜய் ஆட்சியிலும் தொடர்கிறது. ஏற்கனவே அடிடாஸ் காலணி தயாரிப்புக்கான தென்கொரிய நிறுவனம் ஹ்வாசியுங் திருநெல்வேலியில் அமைக்கத் திட்டமிட்ட ரூ.1,720 கோடி தொழிற்சாலை ஆந்திராவுக்குப் போனது. ராயல் என்ஃபீல்டு திருப்பதியில், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் ஸ்ரீ சிட்டியில், கூகுளின் 1.3 லட்சம் கோடி ரூபாய் AI மையம் விசாகப்பட்டினத்தில் — இப்படி ஒவ்வொரு உயர் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் திட்டமும் தமிழகத்தைத் தவிர்த்துச் செல்கின்றன.

துண்டு இல்லாத சேரும், வீட்டுச் சாப்பாடும், தனி லேன் பயணமும் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் நேரத்தில்,  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டை விட்டு நழுவுவது வேதனையளிக்கிறது. வெறும் பிரச்சார எளிமைக்கு அப்பால், உண்மையான தொழில் நட்பு சூழல், வேகமான முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆட்சி தேவைப்படுகிறது. இல்லையென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்போதும் "வரும்... வரும்..." என்ற விளம்பரத்தோடு நின்று, அண்டை மாநிலங்களுக்கு பறந்து சென்று கொண்டே இருக்கும்.