24 special

தங்க வேட்டையில் ஈடுபட்ட கும்பல் -வாயடைத்த போலீசார்

bus
bus

சேலத்தில்  புதையல் இருப்பதாக கூறி மோசடியில் இரங்கிய கும்பலால் 30 லட்சம் ஏமாந்த நபர் காவல்நிலையத்தில் தஞ்சம்  நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு. சேலம்மாவட்டம் அயோத்தியாப்பட்டனம்  அருகே  நொச்சிப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன் (52) என்ற விவசாயிடம் புதையல் கிடைக்கும் என கூறி வளையில் சிக்கவைத்த அப்பா ,மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர் .விசாரணையில் விவசாயி ராஜேந்திரனிடம் ஆசைவார்த்தை கூறி வீட்டில் புதையல் இருப்பதாக நம்பவைத்துள்ளனர்.மேலும் அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெற்ற ஆறுமுகம்(55)இவரது மகன் அசோக்குமார் (27) புதையல் எடுப்பதற்க்கான வேலை விரைவில் முடிந்துவிடும் என அவரை ஆழமாக நம்பவைத்துள்ளனர்.புதையல் கிடைத்துவிடும் என்ற  பேராசையில் ராஜேந்திரனும் அவர்களை நம்பி ரூ-30 லட்சம் வரை  பணம் கொடுத்துள்ளார்.


தெடர்ந்து செல்போன் மூலம் பேசிக்கொண்டிருந்த இருவரும் நாளடைவில்  பேசுவதையே தவிர்த்து வந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் புதையல் எடுப்பதாக கூறி பெற்ற ரூ 30லட்சம்  பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தான் ஏமாற்றபட்டதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.புகாரின் அடிப்படையில் அப்பா,மகனை இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று சேலம் நீதிமன்ற நீதிபதி கமலகண்ணன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் இருவருக்கும் தலா 2ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ-5000 அபராதம் என உத்தரவிடப்பட்டது.சினிமாவில் நடப்பது போன்று நிஜத்திலும் புதையல் பேராசையால் ரூ-30லட்சம் பறிகொடுத்ததால் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் இது போன்று புதையல் இருப்பதாக கூறி மர்ம நபர்கள் சுற்றி திரிகிறார்கள் அவர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சேலம் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் எச்சரிக்கையும் கொடுத்துள்ளர்.தற்போது சமூக வளைதத்தில்  இது பேசு பொருளாகிறது இந்தக்காலத்தில் இது போன்று மூடநம்பிக்கையில் பணத்தை இழந்து வருகின்றனர் என குற்றம் சாடுகின்றனர்.