விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என்பதால் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவரை காண்பதற்காக மதிமுகவை சேர்ந்த பொதுச் செயலாளர் துரை வைகோ மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்து வந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உடல் நலம் குறித்த பதிவை பதிவிட்டு இருந்தார். மேலும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார் என்றும் இதனால் அவரை காண்பதற்கு பெருமளவில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கிடையில் அதிமுக பாஜகவின் கூட்டணி விலகல் செய்தி வெளியாக விடுதலை சிறுத்தைகள் அதிமுகவில் தான் இணையப் போகிறது என்று வதந்தியும் பரவியது அது மட்டுமல்லாமல் திமுகவின் கூட்டணி கட்சிகள் பெரும்பாலானவை அதிமுகவில் சேரவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து திமுகவின் தலைமை அதிரடி முடிவாக தொகுதி பங்கீடுகள் குறித்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூட்டணி கட்சிகள் கேட்கும் சீட்டுகளை தருவதற்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் டிஸ்சார்ஜ் ஆகி ஒரு மாத காலத்திற்கு ஓய்வெடுக்க உள்ளார் என்றும் இந்த கால இடைவெளியில் கட்சி சார்ந்த வேலைகளை திருமாவளவன் ஒதுக்கி வைத்துவிட்டு தனது உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
அதுவும் டிஸ்சார்ஜ் ஆன திருமாவளவன் சென்னைக்கு திரும்பினால் அவரை நலம் விசாரிப்பதற்காக பல கட்சியினர் மற்றும் தொண்டர்கள் வருகைபுரிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் இதனால் அவர் ஓய்வெடுப்பதற்கு வெளி மாநிலம் அல்லது வெளி நாட்டிற்கு கூட சொல்லலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படி திருமாவளவன் தனது மருத்துவ சிகிச்சை காலத்தை குறி வைத்து தன் கட்சிக்கு மூன்று தொகுதிகள் வேண்டுமென பேரம் பேச காத்திருப்பதாக சில அரசியல் தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது அதிமுக கூட்டணியோ அல்லது திமுக கூட்டணியோ எந்த கூட்டணியாக இருந்தாலும் மூன்று தொகுதிகள் நிச்சயமாக கேட்க வேண்டும் ஏனென்றால் கடந்த முறை இரண்டு தொகுதிகள் கிடைத்தது அதனால் இந்த முறை ஒரு தொகுதி கூடுதலாக மூன்று தொகுதிகளாக நாம் கேட்க வேண்டும் யார் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என திருமாவளவன் அறிவிக்க உள்ளதாகவும் அதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக தூதுக்கள் திருமாவளவனிடம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திருமாவளவனின் இந்த திட்டத்தை கேள்விப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து கூட பேசவில்லையாம் ஆனால் எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் அழைத்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதாவது முதல்வர் ஸ்டாலின் திருமாவளவன் கூட்டணியில் இருந்து கொண்டு தற்போது அடம் பிடிக்கிறார் எவ்வளவு தூரம் அவர் சொல்லுவார் என்பதை பார்த்துக் கொள்ளலாம் என முதல்வர் காத்துக்கொண்டிருப்பதாகவும் சில அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவிலான கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் அதிமுகவிற்கு தற்போது கண்டிப்பாக சில கட்சிகள் கூட்டணியில் இணைய வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக செயலாற்றி வருகிறது. ஆனால் முதல்வர் திருமாவளவனின் அடம்பிடித்தலால் கோபமடைந்து அமைதியாக இருக்கிறார், பார்க்கலாம் இதற்கு மேலும் தமிழக அரசியல் களம் எவ்வாறு மாறும் என்பதை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.