கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்த பொழுது செந்தில் பாலாஜியின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இருப்பினும் இவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் இறுதியில் நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உடல்நிலை சரியான பிறகு புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். இருப்பினும் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு பொறுப்புகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
ஆனால் அமைச்சர் என்ற பதவி அவரிடம் பறிக்கப்படவில்லை இதனால் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளி வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சியில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்த பொழுது மேற்கொள்ளப்பட்ட 3000 பக்க குற்ற ஆவணங்களையும் 120 பக்க குற்ற பத்திரிகையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வலுவான கருத்துக்களை முன்வைத்த காரணத்தினால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக இருந்தாலும் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையிலான போதிய ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளித்து அவரது ஜாமீனை தள்ளுபடி செய்தார்.
இருப்பினும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடித்து கொண்டே மட்டும் சென்றது. இந்த நிலையில் ஜாமீன் குறித்த மனு மீது தீர்ப்பளித்த பொழுதே செப்டம்பர் 29ஆம் தேதி வரை செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிமன்ற காவல் முடிவடைந்து. இதனால் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர் படுத்தினார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி அல்லி அவரை நீதிமன்ற காவலை அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டு உள்ளார். இத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஏழாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையிடம் சரணடைந்தால் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது இல்லையென்றால் நிச்சயமாக அவரது பதவி பறிக்கப்பட்டு சிறை தண்டனைக்கு உள்ளாவார் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அசோக்குமார் வெளியே வர உள்ளதாகவும், மேலும் அமலாக்க துறையிடம் சரணடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளி வரவில்லை. அப்படி விரைவாக செந்தில் பாலாஜி தம்பி வெளியே வந்து அமலாக்கத்துறையிடம் சரணடையும் பட்சத்தில் திமுகவின் முக்கிய தலைகள் உருளும் எனவும் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை அசோக் குமாரின் வருகை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே செந்தில்பாலாஜி தம்பி அமலாக்கத்துறையால் கைது என செய்திகள் வெளிவந்து அது சில மணி நேரங்களில் அமலாக்கத்துறையால் மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.. தற்போது செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் மற்றும் இந்த வழக்கில் முன்னேற்றம் கிடைக்க செந்தில்பாலாஜி தம்பி தலைமறைவில் இருந்து வெளியில் வருவதை தவிர வேறு வழியில்லை என கூறுகின்றனர் இந்த செந்தில்பாலாஜி வழக்கை ஆரம்பம் முதலே கவனித்து வரும் விமர்சகர்கள்.