24 special

கே பி ஒய் பாலாவை பார்த்தாவது திருந்துங்கள்...! புரட்சி பேசும் நடிகர்களுக்கு பறக்கும் கண்டனங்கள்...!

Surya ,kpy bala
Surya ,kpy bala

பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமானவர் பாலா. மிகவும் எளிமையான மற்றும் சாதாரண மனிதராக விஜய் டிவியில் நுழைந்த இவருக்கு அதே சேனலில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது.. 


சமூக வலைதளங்களில் இவர் தெரிவிக்கும் கமெண்ட்டுகள் மட்டும் டிரெண்டாகுவதையும் தாண்டி சமூக சேவையில் இவர் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அதில் குறிப்பாக தான் சம்பாதித்த பணத்தில் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது சிறியவர்களை படிக்க வைப்பது முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது இப்படி தான் பெரும் வருமானத்தில் தன்னால் முயன்றவரை சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் கே பி ஒய் பாலா. 

மேலும் சமீபத்தில் பாலாவின் செல்லிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அந்த அழைப்பில் ஒரு தாய் தன்னுடைய மகளின் உடல்நிலை குறித்து தெரிவித்து அதற்காக தன்னுடைய மகளின் உடல்நிலை குறித்து தங்கள் சமூக வலைதளத்தில் வீடியோ எதையாவது பகிர்ந்தால் மருத்துவ சிகிச்சைகாவது எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று கேட்டுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடாமல் பாலா நேரில் சந்திக்கலாமா என்று அவர்களிடம் அனுமதி கேட்டு வீட்டிற்கு நேரடியாக சென்று தன்னால் முடிந்த தொகையான ஒரு லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து பெண்ணின் பிசியோதெரபிக்கு ஆகும் செலவையும் தன் பொறுப்பில் எடுத்துள்ளார். இந்த நிலையில் இவரையும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நடிகர்களுடன்  ஒப்பிட்டு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளது. 

அதாவது கடந்த ஆட்சி காலத்தில் பொதுவெளியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு பொது கருத்துக்களை முன்வைத்து வந்த நடிகர் சூர்யா, ஜோதிகா, சித்தார்த் மற்றும் சத்யராஜ் போன்றவர்கள் இந்த ஆட்சி காலத்தில் பொது கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காமலும் அவரவர் தங்களது திரை பாதைகளையும் அது குறித்த கருத்துக்களை மட்டும் தெரிவித்து விட்டு கப்சுப் என அடங்கிவிட்டனர். அதில் சத்யராஜ் போன்ற நடிகர்களோ திமுகவின் மேடைகளில் ஏறி திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பள்ளி மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. மேலும் கடந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் பொது கருத்துக்களை தெரிவித்து இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து வந்தவர்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. 

அதிலும் சென்ற ஆட்சியில் அனைத்திற்கும் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்து, சினிமா விழாக்களில் கருத்து பேசி கொதித்தெழுந்த சூர்யா, ஜோதிகா, சித்தார்த் போன்றோர் இப்பொழுது வாயே திறக்காமல் அமைதியாக இருப்பதும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் சாதாரண மனிதராக ஒரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கே பி ஒய் பாலா  அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்காமல் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சமூக சேவைகளை செய்து வருகிறார் இவரைப் பார்த்தாவது கடந்த ஆட்சியில் கொந்தளித்து வந்த நடிகை, நடிகர்கள் திருந்த வேண்டும் குறிப்பாக சூர்யா, ஜோதிகா போன்றோர் திருந்த வேண்டும் என்று  சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.