24 special

பாஜக-அதிமுக இடையே தொடங்கியது போஸ்டர் யுத்தம்...! இபிஸ்-சை சீண்டும் பாஜகவினர்!

pm modi,edapadi
pm modi,edapadi

தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியில் கலசலப்பு நிலவி வந்தது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்தது அதிமுக நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின் அதிமுக-பாஜக இடையை வார்த்தை போர் நிலவி வந்தது. இந்த பரபரப்பான சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக மாவட்ட பொதுச்செயலாளரக்ள் கூட்டம் நடத்தினார். அதில், மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏகமதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2024ம் ஆண்டு அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டு களத்தில் சந்திப்போம் என தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக பாஜக முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி கூறியுள்ளார். 


கூட்டணி இல்லை என அறிவித்ததும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பாஜகவினர் கம்பி மத்தாப்பு கொளுத்தி எங்களுக்கு தீபாவளி, எடப்பாடிக்கு வந்தது வயிற்று வலி என, நாசுக்காக அமலாக்கத்துறையை உள்ளே இழுத்து கோஷமிட்டனர்.இந்த நிலையில் இன்று காலை அதிமுக தலைமை பொதுவெளியில் பாஜகவை யாரும் விமர்சிக்க வேண்டாம்என்றும் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என அறிவுறுத்தினர். அந்த வகையில் அதிமுகவை யாரும் விமர்சிக்க கூடாது என்று பாஜக தரப்பும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர். அதையெல்லாம் இரு கட்சி நிர்வாகிகளும் ஓரம் தள்ளிவிட்டு தங்களது கருத்துக்களை போஸ்டர்கள் மூலம் யுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர்.

அதிமுக தரப்பில் சிவகங்கை மாவட்ட சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் " நவம்பர் மாதத்தில் தான் தீபாவளி என்று நினைத்தோம், ஆனால் செப்டம்பர் மாதமே தீபாவளியை கொண்டாட வைத்த பொதுச்செயலாளர், 'எடப்படியார்' என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக சார்பில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில்,' போர்க்குணம் கொண்ட காவி படைகள் இருக்க; சனாதனத்தை தாங்கி பிடிக்க மக்கள் இருக்க; புலிபோல் தலைவர்கள் இருக்க; புலிகேசியின் ஆதரவு எதற்கு? போட்றா வெடிய' என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதிமுக-பாஜக இடையேயான போஸ்டர் யுத்தம் போஸ்டர்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய நிலையில் தற்போது போஸ்டர் யுத்தமாக மாறியள்ளது.