24 special

கூட்டணியில் இருந்து விலகிய உடனே சற்றும் எதிர்பார்காததை செய்த பாஜக...!

Annamalai,eps
Annamalai,eps

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது இது குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தது அதிமுக.


இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில் பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருப்பார்கள் எனவும் கவலையில் இருப்பார்கள் எனவும் கணக்கு போட்டு இருந்தது அதிமுக ஆனால் களத்தில் வேறு மாதிரி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நேற்று அதிமுக பாஜக கூட்டணி முறிவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து. அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று இரவு இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருப்பூர் மாநகராட்சி பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல் கூறுகையில் கூட்டணி இல்லையென அதிமுக அறிவித்திருக்கிறது அதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 இந்நேரத்தில் அதிமுகவிற்கு போட்டியாக அல்லாமல்  பாஜக தனியாக நிற்க தயாராக உள்ளது என பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக திருப்பூர் வித்யாலயம் பகுதியில்  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.பாஜக தற்போது எதையும் சந்திக்கும் முடிவிற்கு வந்து இருப்பதாகவும், சொந்த காலில் திராவிட கட்சிகளை எதிர் கொள்ள தயாரான நிலையில் வந்து இருப்பதாக ஒவ்வொரு கிராமம் முதல் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

கூட்டணியில் இருந்து வெளியேறினால் பாஜக தொண்டர்கள் கவலை அடைவார்கள் என அதிமுக எதிர்பார்த்த நிலையில் கிராமம் தொடங்கி நகரம் வரை இரவு முழுவதும் பாஜகவினர் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிமுக மேல்மட்ட தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.