24 special

தங்க கடத்தல் விவகாரம்..! சிக்கப்போகும் பினராயி..! பரபரப்பு வாக்குமூலம்..!


கேரளா : கடந்த 2016ல் UAE தூதரகம் மூலம் தங்கக்கடத்தல் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்து இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பான வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது. UAE தூதரக முன்னாள் செயலாளர் சுரேஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறிய கருத்துக்கள் கேரளாவை மீண்டும் உலுக்கியுள்ளது.


" பினராயி விஜயன்,பினராயி விஜயனின் மனைவி கமலா, அவருடைய மகள் வீணா, முன்னாள் முதமைச்செயலாளர் நளினி முன்னாள் அமைச்சர் ஜலீல் ஆகியோர் தங்க கடத்தலில் ஈடுபட்டது குறித்து சாட்சியம் அளித்துள்ளேன். இதுகுறித்து மேலும் என்னால் வெளிப்படையாக கூறமுடியாது" என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கரன்சி நோட்டுக்களை பினராயி எடுத்துச்சென்றதாக கூறப்படுவதை குறித்து கூறுகையில் " 2016ல் நான் தூதரகத்தின் செயலாளராக இருந்தபோது முதல்முறையாக சிவசங்கர் என்னை சந்தித்தார்.துபாய்க்கு எடுத்துச்செல்லவேண்டிய ஒரு பையை முதல்வர் மறந்துவிட்டதாக கூறினார். அந்த பையை நாங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள துணை தூதரகத்திற்கு கொண்டுவந்தோம்.

அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுக்கள் இருப்பதை உணர்ந்தோம். இதற்குமேல் நீதிமன்றத்தில் நான் சாட்சி கூறியதை விளக்க முடியாது. அதேபோல அடிக்கடி சிவசங்கர் முன்னிலையில் பிரியாணி சமைக்க பயன்படும் பாத்திரங்கள் தூதரகத்திலிருந்து முதல்வரின் க்ளப் ஹவுஸுக்கு செல்லும். ஒருமுறை அல்ல பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது" என செய்தியாளர்களிடம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பினராயிவிஜயனின் தங்க கடத்தல் விவகாரம் 2016ம் ஆண்டு ஸ்வப்னா சுரேஷ் என்பவரே வெளிகொண்டுவந்தார். இந்த வழக்கில் இன்னொரு சாட்சியும் துணைகுற்றவாளியும் ஆன பி.எஸ் சரித்  கூறுகையில் பினராயி தனது ஒவ்வொரு ஐக்கிய எமிரேட் பயணத்தின்போதும் ஒருமுட்டை கரன்சி கொண்ட பாக்கெட்டை உடன் எடுத்துச்செல்வார். அதுமாதிரி தலைமை செயலகத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர் ஒருவரிடமிருந்து ஒரு பொட்டலமும் எடுக்கப்பட்டது" என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சாட்சியங்கள் முழுக்க ஆதாரங்களுடன் பினராயி விஜயனுக்கு எதிராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் போக்கு மாறாமல் இருந்தால் முதல்வர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட பலருக்கும் சிறை உருது என கேரள எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.