புதுதில்லி : கடந்தவாரம் பிஜேபி தலைவர் ஒருவர் நபிகள் குறித்து பேசியிருந்தது பலத்த சர்ச்சைக்கு வழிவகுத்தது. மேலும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து இந்தியாவை மன்னிப்பு கேட்க கோரியது. சர்ச்சைக்கு வித்திட்டவரை பிஜேபி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது. இந்த பரபரப்பு அடங்குமுன் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
அல்கொய்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் காவி பயங்கரவாதிகள் டெல்லி மும்பை குஜராத் உத்திரபிரதேசத்தில் தங்களது முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என மிரட்டியுள்ளது. நேற்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த அறிக்கையில் " அவர்கள் தங்களுடைய வீடுகளிலோ அல்லது அவர்களின் அரண்மனையான ராணுவப்பகுதிகளிலோ அடைக்கலம் புகுந்துகொள்ள மாட்டார்கள்.நம்முடைய அன்பான நபிக்காக நாம் பழிவாங்கவில்லை என்றால் நம் தாய்மார்கள் நம்மை இழந்து தவிக்கட்டும். நமது நபிகளை அவமதிக்கும் யாரையும் கொன்றுவிடுவோம்.
நமது நபிகளை அவமதிக்க துணிபவர்களின் பட்டாளங்களை தகர்க்க எங்கள் உடலிலும் எண்கள் குழந்தைகள் உடம்பிலும் வெடிகளை கட்டுவோம். அமைதியும் பாதுகாப்பும் அவர்களை காப்பாற்றட்டும். வெறும் கண்டனமோ வருத்தமோ வார்த்தைகளில் முடிந்துவிடாது. நமது நபிகளின் கண்ணியத்தை காப்பற்ற போராடுவதற்காக டெல்லி மும்பை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் எங்களை வெடிக்க செய்ய தயாராக உள்ளோம்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.