"ஆளுநர் சத்தமில்லாமல் செய்த இரண்டு முக்கிய சம்பவம் குறித்தும் இதுகுறித்த தகவல் தெரிந்தும் தமிழக ஊடகங்கள் வாய் திறக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்த தகவலை கொடுக்கிறது TNNEWS24."
தமிழக ஆளுநராக முன்னாள் IPS அதிகாரி R.N ரவி பொறுப்பேற்றது முதல் சத்தமில்லாமல் பல நிகழ்வுகளை செய்து வருகிறார் அவரின் செயல்பாடுகள் பலவற்றை முன்கூட்டியே சொல்லி வருகிறது TNNEWS24, மத மோதல் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற செய்தி வெளியான நிலையில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளே தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் இருவரையும் அழைத்து தான் ஒப்புதல் கொடுக்கமாட்டேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார் ஆளுநர்.
அதன் பிறகு டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆளுநர்களிடம் உள்துறை அமைச்சர் அமிட்ஷா புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்தும் வண்ணம், பல்கலைக்கழங்களில் முயற்சியை மேற்கொள்ளவேண்டும் ஏனென்றால் நீங்கள்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் எனவே அதனை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆளுநர் ரவி, இதற்கு ஆளும் திமுக அரசாங்கம் சார்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது, இந்த சூழலில்தான் தமிழக சட்டசபையில் ஆளுநர் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் முறையை மாற்றி அமைக்க சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது முதல்வரின் அறிவிப்பை தமிழக ஊடகங்கள் முக்கிய செய்தியாக ஒளிபரப்பு செய்தனர், இரவு நேரங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டன, திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கவேண்டும் முதல்வரின் அறிவிப்பு இந்தியாவிற்கே முன்னூட்டமாக அமைந்துள்ளதாக வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வரின் அறிவிப்பு வெளியான அன்றே TNNEWS24 கட்டுரை வெளியிட்டது முதல்வரின் அறிவிப்பு சட்டமாக மாற வாய்ப்பே இல்லை, விரைவில் புதிய துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் பரிந்துரை இல்லாமலே ஆளுநர் முடிவு எடுக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக TNNEWS24 தெரிவித்து இருந்தது . தற்போது அது உண்மையாக மாறி இருக்கிறது.
கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு புதிய துணை வேந்தர்களை அதிரடியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர். கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சீதாலட்சுமி 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் ஜெ.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரு நியமனங்களும் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அமையாமல் ஆளுநர் அமைத்த முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தலைமையிலான தேடல் குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணாபல்கலைகழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போது திமுக கடுமையாக விமர்சனம் செய்தது மாநில உரிமையை அதிமுக பறிகொடுத்து விட்டதாகவும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டது. தமிழக ஊடகங்கள் சூரப்பா நியமனத்தை பெரும் விவாத பொருளாக மாற்றின. ஆனால் இன்று திமுக ஆட்சியில் இரு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் செய்யபட்ட போதும் எந்த எதிரிப்பும் வெளியாகவில்லை.
தமிழக ஊடகங்களும் இது குறித்து வாயே திறக்கவில்லை, சத்தமில்லாமல் தமிழக ஆளுநர் பல்வேறு முக்கிய விவகாரங்களை செய்து வருவது துணை வேந்தர்கள் நியமனம் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது. இது தவிர்த்து 2022 ஜூன் மாத இறுதியில் முக்கிய மாற்றம் ஒன்று தமிழக அரசியலில் ஆளுநர் மாளிகை மூலமாக அரங்கேற இருக்கிறது அதனை தெரிந்து கொள்ள. TNNEWS24 உடன் இணைந்திருங்கள்.