இயக்குனர் பா.ரஞ்சித் தன்னை தலித் விடுதலை பேசும் சினிமா இயக்குனராக முன்னிலை படுத்திக்கொண்டவர், பல நேரங்களில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருபவர் இந்த சூழலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியல் சமூகத்தை சேர்ந்த அரசு அதிகாரியை சாதி பெயரை கூறி விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து ராஜகண்ணப்பன் வசம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட நலத்துறை கொடுக்கப்பட்டது, மேலும் ராஜ கண்ணப்பணை பதவி நீக்கம் செய்யக்கோரியும் பல்வேறு தரப்பிலும் அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் இயக்குனர் பா.ரஞ்சித் அமைச்சர் ராஜகண்ணப்பணை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதில்., சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்(அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார் என பதிவு செய்தார்.
இந்த சூழலில் ரஞ்சித் விமர்சனத்தை முன்வைத்து இருவேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, ஆளும் கட்சி அமைச்சர் என்பதால் புரியாதது போன்று ரஞ்சித் நேரடியாக விமர்சனம் செய்யாமல் மறைமுகமாக விமர்சனம் செய்வதாகவும், தோழமை சுட்டுதல் என திருமாவளவன் தயாநிதி மாறன் கருத்திற்கு பதில் அளித்தது போன்று.,
பா.ரஞ்சித்தும் தோழமை சுட்டுதல் வரிசையில் இடம்பெற்றுள்ளார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ராஜகண்ணப்பன் அவ்வாறு பேசினார் என எந்த கருத்தின் அடிப்படையில் முன் முடிவிற்கு ரஞ்சித் வந்தார் என கண்ணப்பன் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதே செயலை பாஜகவை சேர்ந்த யாராவது செய்து இருந்தால் இந்நேரம் ரஞ்சித் வேறு விதத்தில் ட்விட் செய்திருப்பார் எனவும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.