24 special

கொரோனாவால் பிஜேபி மற்றும் காங்கிரசுக்கு பெரும் சரிவு..!

congress
congress

புதுதில்லி : 2020-21ல் கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. இதனால் உலகம் முழுதும் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றது. ஆனாலும் இந்நேரத்தில் உலகம் முழுவதுமுள்ள அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகளில் பெரிதளவில் எதுவும் பாதிப்பில்லை. அமெரிக்க காங்கிரஸ் உட்பட பல கட்சிகளுக்கு தாராள நிதி கிடைத்தே வந்தது.


இந்நிலையில் இந்த தொற்று காலத்தில் தனியார் நிறுவனங்கள் தேர்தல் அறக்கட்டளைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பிஜேபி மற்றும் காங்கிரஸ் பெற்ற நன்கொடை முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020-21 நிதியாண்டில் பிஜேபி பெற்ற நன்கொடை 2019-20 நிதியாண்டைவிட 39 சதவிகிதம் குறைந்துள்ளதாக பிஜேபி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பிஜேபி இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்களிடமிருந்தும் அறக்கட்டளைகளிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் 2020-21 நிதியாண்டில் 477.54 கோடி பெற்றுள்ளது. இதுவே 2019-20 நிதியாண்டில் 785 கோடியாகவும் 2018-19 நிதியாண்டில் 742கோடியாகவும் நன்கொடை பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸோ 2020-21 நிதியாண்டில் 74.5 கோடி நன்கொடையாக பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019-20 நிதியாண்டில் 139கோடி நான்கொடை பெற்ற இந்த கட்சி 2018-19ல் 146கோடிகள் நன்கொடையாக பெற்றிருந்தது. இதுவரை நன்கொடை பெறுவதில் 45 சதவிகித சரிவை கண்டுள்ளது.பிஜேபியோ 39 சதவிகித சரிவை கண்டுள்ளது. இந்த வருடம் ஐந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் சீனத்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக நன்கொடை சரிவு ஏற்பட்டிருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

செவ்வாயன்று இந்திய தேர்தல் ஆணையம் பொதுத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பிஜேபி  477, 54,50,077 கோடிகள் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியாக நன்கொடை பெற்றுள்ளது.