புதுதில்லி : பிஜேபி ஆட்சியமைத்த எட்டாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு நலத்திட்டப்பணிகள் மற்றும் ஏழை மக்கள் குழந்தைகளுக்கான எதிர்காலவைப்புத்திட்டம் என பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கடந்த எட்டு வருடங்களில் சிறுபான்மை மக்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் முன்னேற்றத்திற்க்காக பல சட்டங்களையும் சலுகைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராய்ப்பூர் ப்ரொண்டாவில் அமைந்துள்ள ICAR இன்ஸ்டிடியூட் ஆப் பயாடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மேண்ட் வளாகத்தில் கரீப் கல்யாண் சம்மேளனத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ப்ரகலாத் ஜோஷி மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்தார். " மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம் மிக விரைவில் கொண்டுவரப்படும்.
கவலை கொள்ளாதீர்கள். அத்தகைய வலுவான மற்றும் பெரிய முடிவுகள் எடுக்கப்படுகையில் மீதமுள்ள சட்டங்களும் நிறைவேற்றப்படும். அதற்கான உயர்மட்டக்குழு சட்டம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது. சத்தீஸ்கரில் ஆளும் கட்சியான காங்கிரஸ் மத்திய அரசின் பல திட்டங்களை செய்லபடுத்த தவறியுள்ளது. அதன் இலக்குகளை அடைய தவறியுள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் காங்கிரஸ் அரசு 23 சதவிகித பணிகளை மட்டுமே முடித்துள்ளது. காங்கிரசின் இலக்குகளின் தேசிய சராசரி வெறும் ஐம்பது சதவிகிதத்திற்கும் கீழாகவே உள்ளது. மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் எந்தவொரு பிரச்சினையோ சிக்கலோ இல்லை. அதன் பிரச்சினை மேலாண்மை மட்டுமே. இதுமட்டுமல்ல பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் அதன் இலக்குகளை இன்னும் மாநில காங்கிரசால் அடையமுடியவில்லை" என ப்ரகலாத் ஜோஷி கூறினார்.
மேலும் பொதுசிவில் சட்டம் ஏற்கனவே பரிசீலனையில் உள்ள நிலையில் இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு பெர்ம் நன்மை பயக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயல் என விமர்சித்து வருகின்றன.