புதுதில்லி : மத்திய பிஜேபி அரசின் எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி மக்களுக்கான பல நலத்திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார். இதன் ஒருபகுதியான ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசினார். குழந்தைகளுக்கான சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்தார்.
இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய பாரதபிரதமர் மோடி " நான் உங்களுடன் ஒரு பிரதமராக பேசவில்லை. உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுகிறேன். கொரோனா தோற்று நோயின்போது நீங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து பட்ட வேதனையை நானும் உணர்கிறேன். இந்த PM CARES பார் சில்ட்ரன் எனும் திட்டம் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிரமங்களை குறைக்க ஒரு சிறு முயற்சி. தொழிற்கல்வி தொடர்பான படிப்புகளுக்கு யாருக்காவது கல்விக்கடன் தேவைப்பட்டால் அதற்கும் இந்த திட்டம் உதவும்.
மற்ற திட்டங்களின் மூலம் குழந்தைகளுக்கு 4000 மாதந்தோறும் அன்றாட தேவைகளுக்காக வழங்கப்படும்.18 முதல் 23 வயதுவரை உள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். 23 வயதாகும்போது 10 லட்சத்திற்கான காப்பீடு திட்டங்கள் வழங்கப்படும். நாங்கள் எங்கள் விஞ்ஞானிகளை நம்பினோம். மருத்துவர்களை நம்பினோம். எங்கள் இளைஞர்களை நம்பினோம்.
நம்பிக்கையின் கீற்றாய் முளைத்து வந்தோம். நாம் கொரோனாவை வெற்றி கொண்டோம். இலவச தடுப்பூசி மக்களுக்கு வழங்கினோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். சில நாடுகளுக்கு இலவசமாய் வழங்கினோம்" என பிரதமர் மோடி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மத்தியில் காணொளி வாயிலாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி மற்றும் சில கேபினட் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் பாஸ் புக் ஆயுஷ்மான் பரத் அட்டை, மற்றும் பிரதம மந்திரி சன ஆரோக்கிய யோஜனா அட்டை ஆகியவை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.