24 special

பச்சை துரோகி வங்கதேசம்... அடிக்க ஆரம்பித்த இந்தியா.. இந்திய ராணுவத்தின் மெகா பிளான்

PMMODI,SHEHBAZSHARIF
PMMODI,SHEHBAZSHARIF

1971-ல், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சர்ச் லைட்’ என்ற கொடூர இனப்படுகொலை முயற்சியிலிருந்து கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றி, ஒரு தனி நாட்டை உருவாக்கி கொடுத்தது இந்திய ராணுவம்.ஆனால் இன்று, அதே வங்கதேசம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கே சவால் விடும் வகையில் நடந்து கொள்வது, வரலாற்று துரோகமாகவே பார்க்கப்படுகிறது.


முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல், வங்கதேசத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

குறிப்பாக இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் கிருஸ்த்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறார்கள். 

இந்த வன்முறைகளின் உச்சமாக, திப்பு சந்திரதாஸ் என்ற இந்து மதத்தை சேர்ந்த தொழிலாளியை, ஒரு சக ஊழியருடன் ஏற்பட்ட சாதாரண தகராறுக்குப் பிறகு ‘மத நிந்தனை’ என்ற பொய் குற்றச்சாட்டின் கீழ் பொதுவெளியில் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம், உலகையே உலுக்கியுள்ளது.

ஒரு நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென்றால், முதலில் ஒரு ‘வில்லனை’ உருவாக்க வேண்டும் என்ற பழைய உத்திதான் இங்கே மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவும், இந்துக்களும் அந்த ‘வில்லன்’ வேடத்திற்கு திட்டமிட்டு நிறுத்தப்படுகிறார்கள்.இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை தூண்டும் வகையில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன.


இதன் தொடர்ச்சியாக, இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதிகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.திரிபுரா, மேகாலயா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முழுமையான அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திரிபுரா எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ரகுமான் மற்றும் மொஷாஷித் என்ற இருவர், மேகாலயா எல்லையில் BSF நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.சர்வதேச எல்லையை மீறி இந்தியாவுக்குள் நுழைய முயல்வோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தெளிவான செய்தியை, இந்தியா களத்தில் இருந்து அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு அளவிலான பாதுகாப்பு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தீவிரவாத போக்குடைய கும்பல்கள், பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த முயல்கின்றன.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பின்னணி தங்களுக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கியமான ‘சிக்கன் நெக் காரிடார்’ பகுதியை துண்டிப்போம் என்று சில தீவிரவாத குழுக்கள் முழக்கமிடுகின்றன.

இது இந்தியாவின் பொறுமையை நேரடியாக சோதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்பு விடுத்த எச்சரிக்கை மீண்டும் நினைவுகூரப்படுகிறது.

“இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், 21 கிலோமீட்டர் அகலமுள்ள சிக்கன் நெக் காரிடார், 200 கிலோமீட்டர் அகலமுள்ள பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும்” என்ற அவரது வார்த்தைகள், இன்று மிகப் பொருத்தமானதாக மாறியுள்ளது.அதாவது, தேவைப்பட்டால் வங்கதேசத்திற்குள் புகுந்து பாதுகாப்பு அரணை உருவாக்க இந்தியா தயங்காது என்பதற்கான நேரடி சிக்னல்.

தூதரக ரீதியாக, வங்கதேச உயர் ஆணையரை அழைத்து இந்தியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.ஆனால் களத்தில் வன்முறை குறையாதது, ராணுவ ரீதியான நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.வடகிழக்கு மாநிலங்களில் BSF வீரர்களின் எண்ணிக்கையும், ராணுவ டாங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவ நகர்வு, வங்கதேசத்தின் இந்த ஆட்டம் இனி நீடிக்காது என்பதற்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இறுதியாக, திப்பு சந்திரதாஸ் போன்ற அப்பாவி சாமானியர்களை கொன்று குவிக்கும் ரத்தவெறி பிடித்த கும்பல்களின் கொட்டத்தை அடக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.வரலாற்றில் ஒருமுறை காப்பாற்றிய நாடு, இன்று எல்லை தாண்டி மிரட்டல் விடுக்கும் நிலையில்…

இந்தியாவின் அடுத்த முடிவு என்ன? அதற்கான பதிலை, எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ டாங்கிகளின் எண்ணிக்கையே சொல்லத் தொடங்கியுள்ளது.